பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

albinism

91

albumose


albinism: பாண்டுநோய்; வெள்ளுடல் நோய்; பெரு வெண்மை : பிறவியிலேயே இயல்பான நிறமிகள் உடலில் இல்லாதிருத்தல். இதனால், தோலும் முடியும் வெண்மையாகவும், கண்கள் இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும். இவர்களுக்கு ஒளிரும் வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசும். விலங்குகளுக்கும் இந்நோய் பீடிப்பதுண்டு.

albino : வெளிரி.

albino (albiness) : வெண்குட்டம்; பாண்டு நோய் : தனது உடலில் வழக்கமான கருநிறமூட்டும் பொருளைக் கொண்டிராத மனிதர். இவருடைய முடி வெண்மையாக இருக்கும். கண்கள் கருஞ்சிவப்பாகும். இவர்களுக்கு ஒளிரும் வெளிச்சத்தைப் பார்த்தால் கண்கூசும், விலங்குகளுக்கும் இந்நோய் பீடிப்பதுண்டு.

Albright's syndrome : ஆல்பிரட் நோயியம் : அமெரிக்க உடலி யங்கியல் பேராசிரியர் ஆல்பிரட் என்பவர் கண்டுபிடித்த ஒரு நோய்த் தொகுப்பு இது. இந்த நோயியத்தில் மிகச் சிறு வயதில் பூப்படைதல், எலும்புகளின் இயல்பில் பிறழ்ந்த வளர்ச்சி, ஒழுங்கற்ற நிறமி ஏற்றம் ஆகிய நோய்க் குணங்கள் காணப்படும்.

Albuginea : வெண்நார்த்திசு; வெண்ணுறை; வெளிவெண் நார்த்திசு : ஒரு பகுதியை அல்லது ஒர் உறுப்பை மூடியிருக்கும் வெள்ளை நார்த்திசு.

albumin : கருப்புரதம்; வெண்கரு; வெண்புரதம் : நீரில் கரையக் கூடியதும், கரைந்து வெப்பத்தால் கட்டியாகக் கூடியதுமான புரதவகை. குருதி நிணநீர்க் கருப்புரதம் எனப்படும். குருதி நிணநீரின் முதன்மையான புரதம்.

albuminoid : அல்புமினாய்ட் : (1) ஆல்புமின் ஒத்த, (2) புரதம்; விழியாடியில் காணப்படும் புரதம். (3) குருத்தெலும்புகளில் காணப்படும் புரதம்.

albuminometer : அல்புமினோ மானி.

albuminuretic : அல்புமின் சிறுநீர் சார்ந்த : ஆல்புமின் சிறுநீர் தொடர்புள்ள சிறுநீரில் ஆல்புமின் கலந்து வரும் நிலையில் உள்ள ஒரு நபர்.

albuminuria : வெண்ணீர் நோய்; வெண்புரத நீரிழிவு; வெண்சிறுநீர் : சிறுநீரில் கருப்புரதம் இருக்கும் நோய், இந்நிலை தற்காலிகமாக இருந்து, முழுவதுமாக நீக்கிவிடலாம்.

albumose : அல்புமோஸ் : புரதத்தைப் போன்ற ஒரு