பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/932

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rationale

931

real time imaging


rationale : பகுத்தறிவுக்கோட்பாடு : ஒரு தரவை அல்லது நிகழ்வை விளக்கப் பயன்படும் பகுத்தறியும் முறை.

rationalizatoin : நியாயப்படுத்துதல் : ஒருவர் தனது நடத்தையை அந்நிகழ்ச்சிக்குப் பிறகு, பகுத்தறிவுக்கு அல்லது சமூகத்திற்கு ஏற்ற முறையில் நியாயப்படுத்துகிற உளவியல் பாங்கு.

raves : பிதற்றல்.

raw-loomed : எலும்பும் தோலுமான.

Raynaud's disease : ரேனாட் நோய் : விரல் தமனிகளின் தசையில் ஏற்படும் கரிப்பு. இதனால், கைகால் விரல்களில் தோல் வெளிறிய நிறமாக அல்லது நீலநிறமாக மாறும். சிலசமயம் இளம் பெண்களுக்குத் தசையழுகல் நோய் உண்டாகலாம். கால் கை விரல்களுக்கு இரத்தவோட்டம் குறைவதால் ஏற்படும் நோய்.

reaction : மறு விளைவு; மறு செயல்; எதிர் விளைவு : வேதியியல் மாற்றம், விளைவு, மறு தலிப்பு, எ-டு: லிட்மஸ் தாளுக்கு அமிலத்தால் அல்லது காரத்தால் ஏற்படும் விளைவு, மறு வினை; எதிர்செயல்.

reading disorder : வாசிப்புக் கோளாறு : ஒருவரது அறிவுத் திறனைவிட மிகக் குறைவான படிக்கும் திறமையுள்ள ஒரு சொல்வளக் குறைபாடு.

Read method : ரீட்முறை : கிரான்ட்லி டிக்-ரீட் வடிவமைத்த இயல்பான குழந்தை பிறப்புக்கு உடல் மன தயாரிப்பு முறை.

reagent : விளைவிப்புப் பொருள்; வினையூக்கிப் பொருள் : எதிர்த் தாக்காற்றல் மூலம் சேர்மத்தின் பொருட்கூற்று கண்டறிய உதவும் பொருள்.

reality orientation (R.O.) : உண்மை உணர்த்தும் மருத்துவம் : குழப்பமும் மனச்சோர்வும் அடைந்த நோயாளிகளுக்கு அவர்களின் பெயர், நேரம், இடம், தேதி முதலியவற்றை அடிக்கடி நினைவுபடுத்தி அவர்கள் இயல்பு நிலையை உணரும்படி செய்யும் மருத்துவ முறை.

reality testing : மெய்யியல்புச் சோதனை : தனக்கு வெளியேயுள்ள உலகை முறையாக மதிப்பிட்டுத் தீர்ப்புக்கூறும் மனவியல்.

real time imaging : உண்மை நேர வடிவக்காட்சி : ஒரு வேகமான செய்முறை நிகழ்வினை நுண் நொடிகளில் காட்சியாகக் காணுதல். இதற்கு பி பிரிவை கேளா ஒலியியல் போன்ற மிக