பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/934

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

recliner's reflux..

933

rectal atresia


recliner's reflux syndrome : மல ஒழுக்கு நோய் :' முன்பக்க மலக் கழிவுச் செயல்முறையில் ஏற்படும் கடுமையான கோளாறு காரணமாக இது உண்டாகிறது. இந் நோயாளிகள், படுத்திருந்தாலும் தாழ்வான நாற்காலியில் சாய்ந்திருந்தாலும், எந்த நேரத்திலும் மலம் கசியும்.

recombinant DNA : ஒருங்கிணைப்பு டிஎன்ஏ : இரு வேறுபட்ட உயிரிகளின் மரபணு டிஆக்சிரிபோ நியூக்ளிக் அமிலத்தை (டிஎன்ஏ) வேதியியல் முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட டிஎன்ஏ இயல்பான மர பணுக்கள். இயல்புமீறிய மரபணுக்கள் ஆகியவற்றின் கட்டமைப்புகளையும் செயற்பணிகளையும் ஆராய்வதற்கு இது பயன்படுகிறது. நடைமுறையில் நோய்க்குறிகளைக் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.

reconstructive surgery : மீட்டுருவாக்க அறுவை : ஒரு திசுவை அது முன்னிருந்த வடிவுக்கு மீண்டும் கொண்டுவர செய்யப்படும் அறுவை மருத்துவ முறை.

record : பதிவேடு : ஒரு நோயாளியின் கவனிப்பு தொடர்பான செய்தியை எழுத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணம்.

recovery : உடல் நலமீட்பு; மீளல்.

recovery room : அறை : அறுவை மருத்துவம் செய்யப்பட்ட நோயாளிகள் மயக்கம் தெளிந்து எழாத நிலையில், வார்டுக்கு கொண்டு செல்லப்படுமுன் மயக்கம் தெளிய கவனிப்பு தருவதற்கான அறுவை அரங்கத்துக்கு அருகிலுள்ள அறை.

recreational drug : மனமகிழ் மருந்து; இன்பமூட்டு மருந்து : தன் விருப்பமாக தன் இன்பத்துக்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்துப்பொருள்.

recreation therapy : மனமகிழ் மருத்துவம்.

recrudescence : நோய்க்குறி மறுதோற்றம் : நோய்க்குறிகள் மீண்டும் கிளர்ந்தெழுந்து தோன்றுதல்.

rectilinear scanner : நேர்க்கோட்டு நுண்ணாய்வி : உறுப்பிலுள்ள கதிரியக்கத்தை கண்டறிந்து அதன் அமைப்புக் கூறைக்காட்சியாக உருவாக் கும் கருவி.

reactivity : விளைவிப்பு ஆற்றல்.

reactor : விளைவிப்புக் கருவி.

rectal atresia : மலக்குடல் குறை வளர்ச்சி.