பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/937

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

red hepatization

936

reflection


செசன்ஸ் எனப்படும் நோய்க் கிருமியால் உண்டாகும் அபூர்வமான வகை இரைப்பை குடல் அழற்சி.

red hepatization : சிவந்து கல்லீரல்போலாதல் : சிவப்பணுக்கள் வெளிக்கசிவாலும் ஃபைப்ரின் திரட்சியாலும் துரையீரல் சிவந்து கல்லீரல் போலாதல். இது லோபார் நிமோனியா நோயின் இரண்டாவது நிலை.

red hot throat : வெம்மைச் சிவப்புத் தொண்டை : பல்வேறு நோய்த் தொற்றுகளால் தீவிர அழற்சியால் சிவந்து காணப்படும் தொண்டையின் வாய்ப் பகுதி.

red infarct : சிவப்புத் திசுவழிவு : குருதிக்குறைவால் மூளை இரத்தமிழந்து ஏற்படும் நோய் நிலை.

red marrow : சிவப்பு மச்சை : பல எலும்புகளில் குழிவறைகளில் காணப்படும் சிவப்பு நாளப்பொருள். இரத்த ஓட்டத்துக்குள் சிவப்பணுக்களையும் வெள்ளணுக்களையும் தயாரித்து வெளியிடும் பொறுப்பு அதற்குள்ளது.

red nucleus : சிவப்பு உட்கரு : நடுமூளையின் பின்பகுதியில் காணப்படும் பெரும் மேடு.

reducing agent : ஆக்சிஜன் குறைக்கும் பொருள்.

reduction : ஆக்சிஜன் குறைத்தல் உயிர்வளிக் குறைப்பு : ஆக்சிஜன் வாயுவைக் (பிராணவாயு) குறைத்தல், எலும்பு ஒருங்கிணைத்தல்.

Reed-Sternberg cell : ரீட்- ஸ்டென்பெர்க் உயிரணு : ஹாட்ஜ்கின் நோயில் காணப்படும், பல உட்கரு கொண்ட, பெரும் ரெட்டிகுலோ என் டோதீலியல் செல். ஆஸ்ட்ரியவைச் சேர்ந்த நோய்க்குறியிலாளர் கார்ல்ஸ்டென்பெர்க்கும், அமெரிக்க நோய்க்குறியியலாளர் டோரதிரீடு இருவர் பெயராலும் இந்த செல் பெயர் பெற்றது.

reentry : மறுநுழைவு : இதயப் பகுதி ஒன்றுக்குள் ஒரு தூண்டல் மீண்டும் வந்து அதை மறுபடி இயங்கச் செய்வது.

referred pain : ஏவு வலி : வலி உண்டாகும் ஆதார இடத்திலிருந்து தொலைவில் வலி ஏற்படுதல், எ-டு தோள் பட்டை சார்ந்த வலி பித்தப்பை நோயில் உணரப்படுதல்.

reflection : பிரதிபலிப்பு : 1. பின் வளைதல், 2. ஒரு பரப்பிலிருந்து ஒளி அல்லது வேறுவகை ஒளியுமிழ் ஆற்றலைத் திருப்பி அனுப்புதல்.