பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/939

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

refractory error

938

rehabilitation


பட மறுத்தல் மருத்துவம் செய்துகொள்ள பிடிவாதமாக முரண்டு செய்தல்.

refractory error : ஒளிவிலகல் அளவு : ஒளிவிலகல் பிழையளவு.

refracture : மீள்முறிவு : முறிந்து பின்இணைந்த எலும்பு மீண்டும் உடைதல்.

refrigerator : குளிர்பதனப்பெட்டி.

regeneration : புத்துயிர்ப்பு; புத்துயிரளித்தல்; மீளமைப்பு : திசுக்களுக்குப் புத்துயிரூட்டிப் புதுவாழ்வளித்தல்.

regeneration of nerve : நரம்பின் புத்துயிர்ப்பு.

regimen : திட்டமுறை  : நல வாழ்வுக்கான அல்லது சிகிச்சைக்கான, உணவு, உடற் பயிற்சி, வாழ்க்கை முறை ஆகியவற்றை முறைப்படுத்தல்.

regional ileitis : பின் சிறுகுடல் அழற்சி : சிறுகுடல் பின்பகுதியில் ஏற்படும் அழற்சி. இது பெரும்பாலும் வயதுவந்த இளையோருக்கு உண்டாகிறது. இதனால் பின் சிறுகுடலில் வீக்கத்துடன் புண் உண்டாகிறது. பெருங்குடல், மலக்குடல், மலங்கழியும் வாய் ஆகியவற்றிலும் இது ஏற்பட லாம்.

registered medical practitioner : பதிவுபெற்ற மருத்துவர் : அங்கீ கரிக்கப்பட்ட மருத்துவக்கல்வி நிலையத்தில் ஒரு முறையான கல்வி பயின்று, மாநில அல்லது தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ள ஒரு மருத்துவத் தொழில் செய்பவர்.

regression : பின்னடைவு; சவலை; சிறுபிள்ளைத்தனம்; பிற்போக்கு : மனநோய் மருத்துவத்தில், உளவியல் வளர்ச்சியின் தொடக்க நிலைகளுக்குப் பின்னோக்கிச் செல்லுதல். அதாவது, மேன்மேலும் சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளுதல் மனத்தளர்ச்சியினால் ஏற்படும் பைத்தியத்தின்போது இது உண்டாகிறது. தாய்க்கு இன்னொரு குழந்தை பிறக்கும்போது இளங்குழந்தைகளுக்கு இது உண்டாகிறது. இந்தக் குழந்தைகளைச் சவலைப் பிள்ளைகள் என்பார்கள்.

regulation of respiration : மூச்சுக்கட்டுப்பாடு.

regurgitation : எதிரொழுக்கு; பின்னேற்றம்; எதிர்க்களித்தல் : பின்னோக்கிப் பாய்தல். எ-டு ; இரைப்பையிலுள்ள பொருள்கள் வாய்வழி வெளியேறுதல்.

rehabilitation : மறுசீரமைவு; மறுவாழ்வு : நோய் நலிவின் இயலா நிலைகளை அகற்றி முன்போல் வாழ்க்கை நடத்துவதற்கு உதவி புரிதல்.