பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/945

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

respirator

944

resting pulse


வாங்கி வெளியே விடுதல். ஓர் உயிரணுவுக்கும் அதன் சுற்றுச் சூழலுக்குமிடையிலான வாயுப் பரிமாற்றம்.

respirator : மூச்சுக்கருவி (சுவா சக் கருவி); மூச்சுப் பொறி; மூச்சு இயக்கி : உட்கொள்ளும் காற்றின் மாசு அகற்றி வெதுவெதுப்பாக மூக்கும் வாயும் கவிந்து அணியப்படும் மெல்லிய வலை மூடிக்கருவி. நச்சு வாயுக் குண்டின் நச்சு ஆவியைத் தடுக்க அணியப்படும் வாய் மூக்கு வலைமூடி.

respiratory acdemia : மூச்சு அமிலப் பெருக்கம் : மூச்சு இயக்கத் தளர்வினால் குருதியின் அமிலத்தன்மை மிகுதியாதல்.

respiratory centre : மூச்சு மையம்.

respiratory distress : மூச்சுத்திணறல்.

respiratory function tests : மூச்சு இயக்கச் சோதனைகள் : சுவாச இயக்கத்தைக் கணித்தறிவதற்காக பல பரிசோதனைகள் கையாளப்படுகின்றன. உள்ளிழுக்கும் காற்றின் அளவு வெளியேறும் காற்றின் அளவு, ஒரு நிமிட நேரத்தில் மிக அதிகமாக உட்சுவாசிக்கும் காற்றின் அளவு ஆகியவற்றைக் கண்டறிய இந்தச் சோதனைகள் செய்யப்படுகின்றன.

respiratory failure : மூச்சு இயக்கத் தோல்வி : நுரையீரல்கள் இரத்தத்தில் போதிய அளவு ஆக்சிஜனேற்றுவதற்குத் தவறுதல்.

respiratory syncytial virus (RSV) : பலகரு சுவாசக்கிருமி : பச்சிளங்குழந்தைகளுக்குக் கடுமையான சுவாச நோயை உண்டாக்கும் நோய்க் கிருமி. இது சில சமயம் மரணம் விளைவிக்கும்.

respiratory systern : மூச்சு மண்டலம் : மூச்சை உள்ளிழுத்து வெளியிடுவதற்கு உதவும் உறுப்புகள். இதில் மூக்கு, மூக்குத் தொண்டை, குரல்வளை, மூச்சுக் குழாய்கள், நுரையீரல்கள் ஆகியவை இதில் அடங்கும்.

respiratory tract : மூச்சுவழி.

responaut : எந்திரச் சுவாச நோயாளி; பொறி மூச்சர் : நிரந்தரமாக மிகக் கடுமையான சுவாச வாத நோய் உடைய நோயாளி. இவர் சுவாசிப்பதற்கு எந்திர உதவி தேவை.

restenosis : மீள்குருக்கம் : சரிசெய் அறுவை பிறகு மீண்டும் ஏற்பம் குறுக்கம்.

resting pulse : ஓய்வு நிலைநாடி : உடலும் உணர்வுகளும் ஒய்வா யிருக்கும்போது ஒருமனிதனின் நாடித் துடிப்பளவு.