பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

aleudrin

94

algesia


எண்ணிக்கை மிகக்குறைந்த அளவில் காணப்படுதல்; வெள்ளணுக்களே இல்லாத நிலைமை.

aleudrin : அலூட்ரின் : ஐசோப் ரனலின் சல்ஃபேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

aleukaemia : வெள்ளணுப் பெருக்கமின்மை : வெள்ளணுக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருத்தல். எலும்பு மஜ்ஜையில் இரத்தப் புற்று நோய்க்குரிய மாற்றங்கள் தெரியும். ஆனால், புற இரத்தத்தில் வெள்ளணுக்கள் குறைவாகக் காணப்படும்.

aleukia : வெள்ளணுவின்மை : இரத்தத்தில் வெள்ளணுக்கள் இல்லாத நிலைமை.

alexeteric : தொற்று எதிர்ப்பி.

alexia : சொற்குருடு; படித்துணரா; படித்துப் புரியும் உணர்வின்மை; எழுத்தறிவுத் திறனிலா : பார்க்கும் சொற்களை உணர்ந்து வாசிக்க முடியாத மூளைநோய். கல்வியின் தொடக்க நிலையில் ஏற்படும் மூளை நைவுப்புண் அல்லது புலனுணர்வுப் பற்றாக்குறை காரணமாக இது ஏற்படும்.

alexiaverbal : சத்தமிட்டுப் படிக்க முடியாமை.

alexin : குருதிப்புரதம் (அலக்சின்) : குருதியில் நோயணுக்களை அழிக்கும் திறனுடைய புரதம்.

alexipharmac : நச்சு மாற்று மருந்து; நச்சுமுறி : நஞ்சுக்கு மாற்றாக அளிக்கப்படும் மருந்து.

alexiapyretic : காய்ச்சல் தடுப்பி.

alexithymia : ஒருவருடைய மன நிலையையும் உணர்ச்சி வேகத் தையும் விவரிப்பதற்குச் சிரமப்படுகின்ற அல்லது விவரிக்க இயலாத நிலையிலுள்ள தன்மை.

aleydigism : லேடிச் சுரப்பின்மை : லேடித்திசு இடை அணுக்களின் சுரப்பு இல்லாமை.

alfentamil : ஆல்ஃபெந்தமிழ் : நோவுணர்ச்சி அகற்றும் மருந்து. இது 'மார்ஃபின்' என்ற அபினிச் சத்துப்பொருள் போன்றது.

alga : பாசி : பாசியினத்தைச் சேர்ந்த.

algae : பாசிகள்; பாசியினம் : பச்சையம் கொண்ட தண்ணிர்த் தாவரங்கள்; இவை தண்ணிரிலும் வாழும், கடல் நீரிலும் வாழும் பல வடிவங்களிலும் அளவுகளிலும் காணப்படும்.

algal : பாசி நோய்.

algaroba : உலர் பழப்படி.

algedonic : வலிதரும்.

algefacient : குளிரூட்டி.

algesia : மிகை வலியுணர்வு; அதி வலியுணர்வு : அளவுக்கு மீறிய