பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/953

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rhinovirus

952

ribosomes


வற்றைப் பாதிக்கும் பூஞ்சண நோய்.

rhinovirus : தடுமன் நச்சுயிர்; தடுமன் கிருமிகள் : பொதுவான தடுமனை உண்டு பண்ணும் சுமார் 100 வகையான கிருமிகள். நாசி வைரஸ்கள்.

rhizotomy : முதுகந் தண்டு நரம்புப்பிளவு; வேர் நீக்கம் : முதுகுந்தண்டு நரம்பின் பிற்பகுதி வேர்களை அறுவை மருத்துவம் மூலம் பிளவுபடுத்துதல்.

rhodopsin : விழித்திரை நிறமி : விழித்திரைக் கோல்களிலுள்ள பார்வைக் கருஞ்சிவப்பு. இதன் நிறம் இருட்டில் பாதுகாக்கப்படுகிறது. பகல் ஒளியில் இது வெண்மையாகிறது. வைட்ட மின்-ஏ உயிர்ச் சத்தினைப் பொறுத்து இது அமைகிறது.

rhonchus : நுரையீரல் புற ஒலி; கீச்சு மூச்சு ஒலி : நுரையீரலின் புறத்தேயிருந்து வரும் ஒலி. இது இழைம அழற்சியினால் மூச்சுக்குழாய் வழியே காற்று செல்வது தடுக்கப்படுவதால் உண்டாகிறது.

rhபbarb : பேதி மருந்து : ஒரு சீனச் செடியின் உலர்ந்த வேரிலிருந்து எடுக்கப்படும்பேதி மருந்து.

rib : விலா எலும்பு.

ribavirin : ரைபாவிரின் : டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ. வைரஸ்களுக்கும் எதிரான பெருமளவு நச்சுயிர் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டது.

riboflavin : ரிபோஃபிளேவின் : வைட்டமின்-பி உயிச்ச்சத்தின் ஒரு கூறு. மேனியேர் நோய், வாய்ப்புண் போன்ற பல நோய்களுக்குக் கொடுக்கப்படுகிறது.

ribonuclease : ரிபோநுக்ளியேஸ் : ரிபோநூக்ளிசிக் அமிலத்தின் மீச்சேர்மத்தைச் சிதைவிக்கும் ஒரு செரிமானப் பொருள். இதைச் செயற்கையாகவும் தயாரிக்கலாம்.

ribonucleic acid (RNA) : ரிபோநூக்ளிக் அமிலம் :' உயிருள்ள உயிரணுக்கள் அனைத்திலும் காணப்படும் நூக்ளிக் அமிலம், இதனை நீரால் பகுக்கும்போது அடினைன், கானின், சிஸ்டோசின், யூராசில், ரிபோஸ், ஃபாஸ் ஃபோரிக் அமிலம் ஆகியவை கிடைக்கின்றன. இவை புரத இணைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ribonucleoprotein : ரைபோநியூக்ளியோபுரோட்டீன் : புரதமும் ஆர்.என்.ஏ.வும் சேர்ந்த கூட்டுப்பொருள்.

ribosomes : ரிபோசோம் : உயிரணுக்கள் அனைத்தினுள்ளும் வினையூக்கிகளை உண்டுபண்ணும் நுண்ணிய புரதம்.