பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/956

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

riedel's thyroiditis

955

rigidity


riedel's thyroiditis : ரைடல் கேடயச் சுரப்பிக் கழலை கேடயச் (தைராய்டு) சுரப்பியில் ஏற்படும் கருமையான கழலை.

ridge-bone : தண்டெலும்பு.

Riedel's disease : ரீடெல்வியாதி (அகக்காழான தைராய்டு அழற்சி): மிகப்பெரிதாகாத நோயின் ஆரம்ப நிலையிலேயே கல் போன்று தடித்த கழலை மூச்சுக்குழலை அமுக்குகிறது.

Riedel's lobe : ரீடெல் மடல் : பித்தப்பை என தவறாகக் கருதக்கூடிய கல்லீரலின் வலது மடலின் நாவுருத் துருத்தம்.

rifampicin : ரிஃபாம்பிசின் : காச நோயைக் குணப்படுத்துவதற்குரிய ஒரு மருந்து இது மற்றக் காசநோய் மருந்துகளுடன் சேர்த்துக் கொடுக்கப் படுகிறது. தொழு (குட்டம்) நோய்க்கும் இது பயன்படுத்தப்படுகிறது.

Rift valley fever : வெடிப்புப் பள்ளத் தாக்குக் காய்ச்சல் : கொசுவினால் பரவும் குருதி நாளக் காய்ச்சல்களில் ஒன்று.

right heart failure : வலது இதய செயலிழப்பு : இந்நிலையில் வலது கீழறையிலிருந்து குறைவான அளவே இரத்தம் வெளியேற்றப்படுகிறது. உடற்சிரைகளில் இரத்தம் தேங்கி அழுத்தம் அதிகமாயுள்ளது. நுரையீரல் வால்வுக்குறுக்கம், நுரையீரல் பல் குருதியுறைக் கட்டியடைப்பு, நாள்பட்ட நுரையீரல் நோய் (கார் பல்மொனேல்) ஆகிய நோய்களில் வலப்பக்க இதயம் மட்டும் செயலிழக்கிறது. இடப்பக்க இதயச் செயலிழப்பே பொதுவாக இதற்குக் காரணமாகிறது.

right-to-left shunt : வல, இட தடமாற்றம் : இதயத்துக்குள் அல்லது நுரையீரலுக்குள் திசை திரும்பி, இரத்தம் வலப்பக்க மிருந்து இடப்பக்கம் பாய்கிறது.

right ventricle : இடது இதய கீழறை : வலது மேலறையிருந்து வரும் இரத்தத்தை ஆக்ஸிஜனேற்புக்காக நுரையீரல் தமனிகள் வழியாக நுரையீரலுக்குள் செலுத்தும் மெல்லிய சுவருடைய இதயக்கீழறை.

rigidity : இறுக்கமான; விரைப்பான : 1. விரைப்புத்தன்மை. 2. எடுக்கப்படும் எல்லா முயற்சிகளுக்கும் எதிராக உறுதியான நிலையை மேற்கொள்ளுதல். 3. செயல் தசைகள், எதிர்செயல் தசைகள் உள்ளிட்ட, எல்லா தசைத் தொகுதிகளின் இறுக்கத் தன்மையும் தடைத்தன்மையும் ஒரே அளவில் அதிகரிப்பது. இது மூளையின் அடித்தள நரம்பணுத்திரள்களின் நோயின் அறிகுறியாகும்.