பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/957

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rigor

956

road to health


rigor : குளிர்நடுக்கம் (பளிப்பு); விறைப்பு : காய்ச்சல் போன்ற நோய்களில் முன்னதாக வரும் திடீர்க்குளிர், நடுக்கம். இதில் உடல் வெப்பநிலை திடீரென உயர்ந்து, வியர்வை வரும்வரை உயர்ந்த அளவில் இருந்து, படிப்படியாக வெப்பம் குறைகிறது.

rigor mortis : சாக்காட்டு விறைப்பு; மரண விறைப்பு : இறந்தபின் ஏற்படும் உடல் விறைப்பு.

rima : விரிசல்; வெடிப்பு; வெக்கை : இரு ஒத்திசைவான ஒரங்களுக் கிடையேயான குறுகிய நீண்ட திறப்பு.

rimactane : ரிமாக்டான் : காச நோயைக் குணப்படுத்தப் பயன்படும் ரிஃபாம்பிசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

rimagiottilis : குரல் தந்தி இடை; குரலியச் சந்து.

ring-bone : எலும்புக்கரணை; எலும்புக் கரணை நோய்.

ring-cartilage : குரல்வளைக் குருத்தெலும்பு.

ringworm : படர்தாமரை; படை; வளைப்புழுவெட்டு : தோலில் உண்டாகும் படர்தாமரை என்னும் படை நோய். இது ஒரு தொற்று நோய். இது படர்தாமரை வளையம் வளையமாக செதில் படலத்துடன் இருக்கும்.

risus sardonicus : இசிவு இளிப்பு; விரைப்பு முறுவல் : நரப்பிசிவு நோயின் வலிப்பு இளிப்பு.

rituafisation : வினைமுறையாக்கம் : (மனநலம்) முதன்மை சமிக்கைச் செயலுக்குள் பரிணாம வளர்ச்சி மூலம் சேர்ந்திணைந்த நடத்தைப் பாங்கின் செயல்முறை.

RNA : ஆர்என்ஏ : ரிபோநூக்ளிக் அமிலத்தின் சுருக்கப்பெயர்.

road to health : நலவாழ்வுக்கு வழி : குழந்தையின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் காட்சியாக்கித் தரும் வளர்ச்சி விளக்கப்படம்.