பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/966

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sacrosalpinx

965

safflower oil


sacrosalpinx : கருப்பைக்குழல் வீக்கம் : சுரப்புகள் தேங்கியதால் கருப்பைக்குழாய் விரிவடைதல்.

saddle nose : வக்கை மூக்கு; அழுந்த நாசி; சேண மூக்கு : மூக்குமேல் விளிம்பில் இடையே பள்ளம் உடைய மூக்கு இது பிறவிக் கிரந்திப் புண்ணின் அறிகுறி.

sadist : கொடுமை விருப்பக் காமன் : பிறருக்குக் கொடுமை செய்வதில் அல்லது பிறர்படும் துன்பம் கண்டு இன்பம் கொள்பவர்.

sadism : கொடுமை விருப்பம்; கொடுமைப் பாலுறவு; கொடு மனம் : மற்றவருக்கு அல்லது பாலுறவுக் கூட்டாளிக்கு வலி, வன்முறை போன்ற கொடுமை விளைவித்து அதில் இன்பம் காணும் கொடு வெறிக் காமம்.

sadness : துன்பநிலை : இயல்பான, துன்பமான அல்லது சோர்வான உணர்வுநிலை.

sadomasochism : பாலினக் கொடுமை வேட்கை : தீவிரமான அல்லது மிதமான நிலையிலுள்ள கொடுமை செய்வதில் விருப்பம் கொண்ட ஒருவகை முரணியல் பாலுணர்வு நிலை.

Saemisch's ulcer : சீமிஸ்ச் புண் : ஜெர்மன் கண் மருத்துவமனை எட்வின் சீமிஸ்ச்சின் பெயர் கொண்ட பளிங்குப்படல படரழற்சிப் புண்.

Safapryn : சேஃபாப்பிரின் : பாதுகாப்பான ஆஸ்பிரின் மருந்தின் வணிகப்பெயர். இது இரைப்பையில் இரத்தக் கசிவு உண்டாக்குவதில்லை.

safe blood : பாதுகாப்பான குருதி : நோய் தரும் கிருமிகளால் பாதிக்கப்படும் ஆபத்து இல்லையென்று அறியப்பட்ட மனிதர்களிலிருந்து பெறப்பட்ட, நிறைந்த செவ்வணுக்கள் மற்றும் குருதிப் பொருட்கள்.

safe light : பாதுகாப்பான ஒளிக்கருவி : சரியாக உருவிளக்கப்படாத எக்ஸ்ரே படத்தில் புகை படாத அளவுக்கு ஒளியை வெளிப் படுத்தும் இருட்டறைக் கருவி.

safesex : பாதுகாப்பான உடலுறவு : ஆணுறைகளைப் பயன்படுதி உடலுறவு கொள்வதால் பால்வினை நோய்களிலிருந்து தன்னையும் தன் (உடலுறுவுத்) துணைவரையும் காப்பாற்றும் செயற்பழக்கம்.

safety pin bodies : காப்பூசி உடலலெய்மங்கள் : அரையாப்பு மணற்கழலை நோயில், பெரு விழுங்கணுக்களுக்குள் காணப்படும் டோனவன் மெய்மங்கள் வரிசைக்குப் பெயர்.

safflower oii : குசும்பப்பூ எண்ணை : குசும்பப்பூச்செடி விதை களிலிருந்து எடுக்கப்படும் எண்ணை.