பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/967

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sagittal

966

salicylism


sagittal : அம்பு போன்ற; வகிட்டு : அம்பு வடிவுடைய மண்டை யோட்டின் உச்சிக்கும் பக்கங்களுக்கும் உரிய எலிம்பிணைகள். அம்பு வடிவ இணைப்பு சார்ந்த.

sago : சவ்வரிசி : பனையின வகை செடியிலிருந்து மருந்து தயாரிக்கப்படும் மாவுப்பொருள்.

Sahli's method : சாஹ்லி முறை : பெர்ன் மருத்துவர் ஹெர்மன் சாஹ்லியின் பெயராலமைந்த ஹீமோகுளோபின் அளவறியும் முறை. இரத்தத்தில் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை சேர்த்து, ஹீமோகுளோபின் அமிலம் ஹெமேட்டினாக மாறுவதால் ஏற்படும் நிறமாற்றத்தை ஒரு, தரப்படுத்தப்பட்ட வண்ண அளவுகோலுடன் ஒப்பிடும் முறை.

Saint's triad : செயின்டின் முந்நோய் : துளைப்பிதுக்கம், பித்தக்கற்கள், சுவர்ப்பிதுக்க நோய் மூன்றும் சேர்ந்த நிலைக்கு தென்னாப்பிரிக்க அறுவை மருத்துவர் ஜே.செயின்டின் பெயர் தரப்பட்டுள்ளது.

salaam convulsion : சலாம் வலிப்பு : இளம் சிசுவின் தலையசைப்பு இசிவு. இரண்டு வயதில் மறையலாம் அல்லது மனவளர்ச்சிக் குறையுடன் தீவிர வலிப்பு நோயாக அதிகரிக்கலாம். மின்னல் வேகத் தலையசைப்புடன் உடல் பகுதியும் கைகளும் வளைவதும் நிமிர்வதும், அரேபியர்கள் வணக்கம் சொல்வது அல்லது பிரார்த்தனை செய்வது போல் உள்ளது.

salbutamol : சால்புட்டாமோல் : காற்றுக் குழாய் (குரல்வளை) விரிவகற்சி மருந்து ஐசோப்பிரி னாலினிலிருந்து எடுக்கப்படுகிறது.

salicin : மரப்பட்டை மருந்து : ஒருவகைக் கசப்பு மரப்பட்டையி லிருந்து எடுக்கப்படும் மருந்து.

salicyl : மரப்பட்டைச் சாறு : மரப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் மருந்துச் சாறு.

salicylamide : சாலிசிலமைடு : இலோசன நோவகற்றும் மருந்து, சாலிசைலேட் போன்று வினை புரியக்கூடியது. ஆனால், இரைப்பைக் கோளறை உண்டாக்காது.

salicylate : சாலிசைலேட் : மரப் பட்டையிலிருந்து எடுக்கப்படும் மருந்துக் காரம்.

salicylic acid : சாலிசிலிக் அமிலம் : பூஞ்சணங்களையும், பாக் டீரியாக்களையும் அழிக்கும் மருந்து. பல்வேறு தோல் நோய்களுக்குப் பயன்படுகிறது. புரை முறையாகவும், வாத முறியாகவும் பயன்படும் மரப்பட்டை வகை மருந்துச் சாற்று அமிலம்.

salicylism : மரப்பட்டை அமிலத் தன்மை : மரப்பட்டை வகை மருந்துச் சாற்றின் அமிலத் தன்மை.