பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/968

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

salicyluric acid

967

salpingemphraxis


salicyluric acid : சேலிசிலூரிக் அமிலம் : சேலிசிலிக் அமிலம் அல்லது அதன் உப்புகளை உட்கொள்வதால் சிறுநீரில் தோன்றும் கிளைக்கால் மற்றும் சாலிசிலிக் அமில கூட்டுப் பொருள்.

saline : உப்புநீர்; உப்பேரி; உவர்நீர் : உப்பு அடங்கிய பொருள். பேதி மருந்து உப்பு, உப்பு சார்ந்த.

saiva : உமிழ்நீர்; எச்சில் : உமிழ்நீர் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் நீர், இதில் நீர், சளி, தியாலின் அடங்கியுள்ளன.

salivant : எச்சிலூக்கி : எச்சில் சுரப்பதைத் தூண்டும் பொருள்.

sallvary : எச்சில்சார் : எச்சில் சுரப்புத் தொடர்பான.

salivary calculus : உமிழ்நீர் கல்லடைப்பு; எச்சிற்கல் : உமிழ் நீர்ச் சுரப்பிகளில் ஏற்படும் கல் போன்ற தடிப்பு.

salivary glands : உமிழ்நீர்ச் சுரப்பிகள்; எச்சில் சுரப்பி : எச்சில் சுரக்கும் சுரப்பிகள்.

salivate : மிகை உமிழ்நீர் ஊறல் : வழக்கத்திற்கு மிகுதியாக வாயில் உமிழ்நீர் ஊறுதல்.

salivation : உமிழ்நீர் சுரத்தல் : 1. உமிழ்நீரைச் சுரக்கும் செயல். 2. உமிழ்நீர் மிகுதியாகச் சுரத்தல்.

salivation : மிகை எச்சில்; உமிழ் நீர் மிகைப்பு; உமிழ்நீர் ஊறல் : வாயில் அளவுக்குமீறி உமிழ்நீர் சுரத்தல்.

salk vaccine : சால்க் வாக்சின் : கொல்லப்பட்ட இளம்பிள்ளை வாதக் கிருமிகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு எதிர்ப்பொருள். இது இளம்பிள்ளை வாத காப்புக்கான ஒரு தீவிரச் செயற்கைக் காப்புப் பொருள் ஊக்கியாகப் பயன்படுகிறது. இது ஊசிமுலம் செலுத்தப்படுகிறது.

salmonella : சால்மோனெல்லா : கிராம் சாயம் எடுக்காத நுண்கம்பிப் பாக்டீரியா வகை. இது ஒட்டுண்ணியாகப் பல விலங்குகளிலும், மனிதரிடமும் உள்ளது. இதனால் நோய்கள் ஏற்படுகின்றன.

salmonellosis : சால்மோனெல்லா தொற்று : சால்மொனெல்லா இனத்தைச் சேர்ந்து நுண்ணுயிரிகளால் தொற்று. டைபாய்டு காய்ச்சலுண்டாக்கும் சால்மொனெல்லா டைஃபை தவிர்த்த மற்ற வகைகளால் உண்டாவது.

salpingectomy : சுருக்குக்குழாய் அறுவை; அண்டக் குழல் எடுப்பு : கருப்பையிலிருந்து கருமுட்டை கருப்பைக்கே கடத்தும் குழாயில் அறுவை மருத்துவம் செய்தல்.

salpingemphraxis : குழலடைப்பு : யூஸ்டேச்சியன் குழல் எனும் செவித் தொண்டைக் குழல் அடைப்பு.