பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/976

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

satyriasis

975

saw-tooth...


படும் சிறு தெய்வங்களில் போன்று, காதுமடல் வழக்கம் போல உருட்டப்பட்ட அமைப்பும், கணுவுமின்றி வழக்கத்தை விட பெரிதாகப் புடைத்துள்ள பிறவிக்கோளாறு. (குதிரைக் காலும் மனித வடிவும் உடைய வனதெய்வக் குழுவில் ஒரு தெய்வம் போன்று).

satyriasis : காமவெறியின் : ஆண்களில், அளவுக்கதிகமாகவும் அடிக்கடியும் ஏற்படும் கட்டுப்படுத்த முடியா பாலுறவு ஆசை.

saucerisation : ஏந்துதட்டாக்கல் : 1. வடிப்பினை எளிதாக்க உண் டாக்கப்படும் குறைவு ஆழ் பள்ளம். 2. நார்த்தசைப் புற்றில் எலும்பும் பாதிக்கப்படும்போது எக்ஸ்ரே படத்தில், நீள எலும்புத் தண்டு போன்ற தட்டுருக்குறை.

sauna : வெப்ப அறை : மிகுந்த ஈரப்பசை மற்றும் மிதம் முதல் உயர் வெப்ப நிலைக்கு ஒருவரை ஆட்படுத்தும், மூடப்பட்ட பகுதி.

sausage link pattern : பண்ட இணைப்பாங்கு : வால்டென்ஸ் ட்ராமின், பெரும் குளோபுலின் புரதக் குருதி, மிகுபசை நோயியம், வளரா நீரிழிவு விழித்திரை பாதிப்பு, இரத்தக் கொதிப்பு விழித்திரை பாதிப்பு இரண் டாம் நிலையில் விழி மையத்தில் தமனிச் சிரை சந்திக்கு மிடத்தில் முழுவதும் துண்டுகளாக உள்ள, மிகவும் விரிந்து வளைந்து நெளிந்த விழித் திரைச் சிரைகள்.

saventrine : சாவன்டிரின் : இதயத் துடிப்பு வேகத்தை அதிகரிப் பதற்காகக் கொடுக்கப்படும் மருந்து. இது நீண்ட நேரம் வேலை செய்யக்கூடியது.

savlon : சாவ்லான் : அறுவை மருத்துவத்துக்கு முன்பு கழுவு நீர்மமாகப் பயன்படுத்தப்படும் நோய் நுண்மத் தடைப் பொருள். இதில் 15% குளோர் ஹெக்சிடினும் 15% செட்ரி மைடும் அடங்கியுள்ளது.

sawfish pattern : இரம்ப மீன் பாங்கு : இதயத்தசை மிகை வளர்ச்சிக் கோளாறில், இரத்த நாள வரைவுப் படத்தில் இடது முன் இறங்கும் இதயத் தமனிக் கிளையின் ஒழுங்கற்ற (சுருங்கலின் போது) குறுகியுள்ள தோற்றம்.

saw-tooth pattern : இரம்ப பல் பாங்கு : 1. செம்பரத்தோல் நோயில் உயிர்திசுநுண்ணோக்கி ஆய்வில் அடித்தோல் மேந்தோல் சந்திப்பு ஒழுங்கற்றுத் தடித்துத் தோன்றுதல் 2. திசு வழிவு, குடல் பெருங்குடலழற்சி அல்லது குருதிக்குறை பெருங்குடலழற்சி ஆகியவற்றில் பேரியம் கொடுத்து. எடுக்கும் பெருங்குடலின் கதிர்ப் படத்தில், ஒழுங்கற்று சிதறிக்