பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/980

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

scarlet red

979

schick test


scarlet red : செஞ்சாயம் : புண்கள், காயங்கள், சிராய்ப்புகள் ஆகியவற்றைச் சுத்தப்படுத்துவதற்கு ஒரு சமயம் பயன்படுத்தப்பட்ட சிவப்புச் சாயம்.

Scarpa's triangle : ஸ்கார்ப்பா முக்கோணம் : இத்தாலிய அறுவை மருத்துவரின் பெயர் கொண்ட தொடைமுக்கோணம்.

SCAT : ஸ்கேட் (எஸ்.சி.ஏ.டீ.) : ஆட்டணுத்திரள் சோதனை.

scathe : புண்.

scatole : மலநாற்றப் பொருள் : மலத்தின் நாற்றத்திற்குக் காரண மான டிரிப்டோஃபேனின் ஆக்ஸிஜனிணைப்புப் பொருள்.

scatology : மல ஆய்வியல் : மலத்தைப் பற்றிய பகுத்தாய்வுப் படிப்பு.

scatoscopy : மல ஆய்வு : மலத்தைப் பரிசோதித்தல்.

scattergram : பரவு வரைபடம் : எக்ஸ் மற்றும் ஒய் அச்சுகளில் குறிக்கப்படும் இரு மாறியல் மதிப்புருக்களுக் கிடேயேயுள்ள உறவு நிலையைக் குறித்துக் காட்டும் வரைபடம்.

SCBU : குழந்தைகள் சிறப்புக் கவனிப்புப் பகுதி.

SCC : எஸ்சிசி : செதிளணுப் புற்று நோய்.

S cell : எஸ் உயிரணு : மேல் சிறு குடலின் சீதச்சவ்விலுள்ள செக்ரீட்டின் தயாரிக்கும் நாள மில்லா சுரப்பியணு.

schema : திட்டம் : 1. பெருட் சுருக்கம். 2. வகுப்பின் முக்கியப் பகுதிகள். 3. முன் கூட்டிய கோடிட்டுக் காட்டல், 4. ஒரு திட்டம் அல்லது வரைவுரு.

schick test : தொண்டையடைப்பான் சோதனை : ஒருவருக்குத் தொண்டையடைப்பான் (டிஃப்தீரியா) நோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கான ஒரு சோதனை. இதில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட நோய் நஞ்சின் 2 அல்லது 3 மினிம் அளவு ஊசி மூலம் இடது புயத்தோலுக்கு அடி யில் செலுத்தப்படுகிறது. இதே போன்று வலது புயத்திலும் செலுத்தப்படுகிறது. ஆனால் இதில் புரதத்தை அழிக்காமல் நோய் நஞ்சை அழிப்பதற்காக குருதி வடிநீர் 75 சென்டிகிரேடு வரை அல்லது 10 நிமிட நேரம் சூடாக்கப்படுகிறது. இடது புயத்தில் 25-48 மணி நேரத்தில் சிவப்பு வளையம் தோன்றும். நான்காம் நாள் இவ்வளையம் மிக உச்சநிலையை அடையும்; பிறகு இது படிப்படியாக மறைந்துவிடும். இந்த வினை நோய்த் தடைக்காப்பு இல்லா