பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/981

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

schildar's disease

980

schistosomiasis


மையைக் குறிக்கும். இவ்வாறு சிவப்புவளையம் எதுவும் தோன்றாவிட்டால் அவருக்குத் தொண்டை அடைப்பானுக்கு எதிராகத் தடைக்காப்பு உள்ளது என்று அறியலாம்.

schildar's disease : நசிவு நோய்; சிதைவு நோய் : மரபுவழித் தோன்றும் இனச்சிதைவு நோய். இது மனவளர்ச்சிக் குறைபாட்டுடன் தொடர்புடையது (ஷில்டர் நோய்).

schilling test : ஷில்லிங் சோதனை : மரணம் விளைவிக்கக் கூடிய குருதிச் சோகை இருப்பதை உறுதிப் படுத்துவதற்காக, கதிரியக்க வைட்டமின்-பி12 சத்துப்பொருள் ஈர்ப்புத்திறனை மதிப்பிடுவதற்கான சோதனை.

Schimmelbusch mask : ஸ்கிம்மெல்புஷ்ச் முகஅணி : ஜெர்மன் அறுவை மருத்துவர் கர்ட்ஸ் கிம் மெல்புஷ்ச் பெயரிடப்பட்ட ஆவி வடிவ உணர்வு நீக்கி மருந்துகளை உட்செலுத்துவதற்காக வலைத்து துணி தாங்கும் கம்பிச் சட்டம்.

Schiotz tonometer : ஸ்கியோட்ஸ்(ஜ்) அழுத்த தமனி : நார்வே நாட்டு கண் மருத்துவர் ஹெச்.ஸ்கியோட்ஸ் பெயர் கொண்ட கருவி, வழக்கமான எடை பளிங்குப் படலத்தை அழுத்தும் போது ஏற்படும் கண் உள் அழுத்தத்தை அளக்கும் கருவி.

schindylesis : பிளவு மூட்டு : ஒரு எலும்பு மற்றொரு எலும்பின் பிளவுக்குள் பொருந்தும் மூட்டிணைப்பு.

schistocoelia : பிளந்த வயிறு : பிறவி வயிற்றுப் பிளவு.

schistocyte : பிளவணு : குருதியழவுரத்தசோகை, காயம், செயற்கை இதயவால்வுகள், பரவலான உள்நாள குருதியுறைவு, பேரணுச்சோகை போன்ற நோய்களில், உள்நாள மடிப்புகளில் காயம் அல்லது உயிரணு வலிவிழப்பு அதிகரிப்பால், இரத்தச் சிகப்பு அணுக்கள் துண்டுபடுதல்.


schistocytosis : பிளவணுப் பெருக்கம் : இரத்தத்தில் பிளவணுக்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுதல்.

schistomelus : பிளவுறுப்புக்கரு : பிளந்த உறுப்புடைய முதிர்கரு.

schistosoma : நத்தைக் கிருமி : இரத்தத்திலுள்ள ஒட்டுண்ணிப் புழுக்களில் ஒருவகை. இது நன்னீரிலுள்ள நத்தைகள் மூலமாக மனிதரைப் பிடிக்கிறது.

schistosomiasis : நத்தைக் கிருமி நோய் : நன்னீரிலுள்ள நத்தைகள் வாயிலாக மனித உடலுக்குள் படையெடுக்கும் நோய் ஒட்டுண்ணிகளால் உண்டாகும் நோய். இது தோல்