பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/986

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sclerotic

scordinema


sclerotic : 1. கண்ணின் வெண் சவ்வு : வெண்விழிக் கோளத்தின் மேல்தோல், 2. இழைமக் காழ்ப்பு சார்ந்த இழைமக் காழ்ப்புக் கோளாறு தொடர்பு உடைய.

Sclerotome : விழிவெண்படல வெட்டுக் கத்தி : 1. விழிவெண் படலத்தை அறுப்பதற்கு பயன் படுத்தப்படும் கத்தி. 2. வளர்கருவின் முதுகுத் தண்டை நோக்கி நடுப்படைப் பகுதியிலிருந்து நகர்ந்து செல்லும் நடுப்பட்டை அணுக்களின் தொகுதி முதுகெலும்புகளாகவும் விலா எலும்புகளாகவும் வளரும்.

sclerotomy : விழிவெண்படல அறுவை : கடுமையான கண் விழிவிறைப்பு நோயைக் குணப்படுத்துவதற்காக வெள்விழிக் கோளத்தின் புறத்தோலைக் கீறிவிடுதல்.

scolex : நாடாப் புழுத்தலை; புழுத்தலை தலைப்பகுதி : குடல் சுவரில் ஒட்டிக் கொண்டிருக்கும் நாடாப்புழுவின் தலை.

scoliosis : முதுகெலும்புப் பக்க வளைவு; பக்க வளைவு; வளை முதுகு : முதுகெலும்பு பக்கவாட்டில் வளைந்திருத்தல். இது பிறவியிலோ அல்லது பின்னரோ ஏற்பட்டதாக இருக்கலாம். முள்ளெலும்பு, முதுகெலும்புப் பக்க வளைவு தசைகள், நரம்புகள் ஆகியவை திரிபடைவதால் இது உண்டாகிறது.

scopalamine : ஸ்கோப்பாலமின் : பல்வேறு தோட்டச் செடி யினங்களிலிருந்து பெறப்படும் அசிட்டைல் கோலினுக்கெதிரான காரகம் ஹையோஸ்சின்.

scorbutic : சொறி நோயாளி : வைட்டமின்-சி உயிர்ச் சத்துப் பற்றாக்குறையினால் உண்டாகும் வயிறு வீக்கம் சொறிகரப்பான் போன்ற நோய்களினால் பீடிக்கப்பட்டவர்.

scordinema : கொட்டாவி : தலை கனத்துடன் கொட்டாவி விடு