பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/995

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sero-diagnosis

994

serotype


துணைக்கு குழுக்களை பிராணிகள், திசுவளர்ம அணுக்கள் அல்லது வளர்ச்சி ஊடகங்களின் வழியாக திரும்பத் திரும்ப செலுத்துகை.

sero-diagnosis : குருதி வடிநீர் நோய் ஆய்வு : குருதி வடி நீரைக் கொண்டு நோயைக் கண்டறிதல்.

seroenteritis : குடல் ஊநீர் உறையழற்சி : குடலின் ஊநீர் உறை அழற்சி.

serofibrinous : ஊநீர் இழைய : ஊநீரும், இழைமமும் சேர்ந்த ஊநீர் இழைம வெளிப்பாடு.

serogroup : ஊநீர்தொகுதி : பொதுவான விளைவியம் கொண்ட, கிருமித் தொகுதி.

serology : குருதி வடிநீரியல் ஊநீரியல் : குருதி வடிநீர்களை ஆராயும் அறிவியல்.

seromuscular : ஊநீர்த்தசைய : குடலின் ஊநீர் மற்றும் தசையுறைகள் தொடர்பான.

seronegative : ஊநீர்மாறான : ஊநீர்ச் சோதனைகளில் சில வற்றில் நேர் எதிரான விளைவு தரும்.

seropositive : ஊநீர் நேரான : சில ஊநீர்ச் சோதனைகளில் நேரான விளைவைத் தருகின்ற.

seropurulent : ஊநீர் சீழ் சார்ந்த : ஊனிரும் சீழும் உடைய.

seroreaction : ஊநீர் விளைவு : ஊநீரில் அல்லது ஊநீர் தொடர்பான விளைவு.

serosa : ஊனீர்ச் சவ்வு : அடி வயிற்று உள்ளுறுப்புகளை முடியிருக்கும் வபைச் சவ்வு.

serosanguinous : ஊநீர்க்குருதிய : ஊநீரும் இரத்தமும் கொண்ட.

seroserous : ஊநீர் ஊநீர : இரண்டு அல்லது மேற்பட்ட சீரச் சவ்வு தொடர்பான.

serositis : ஊனீர்ச் சவ்வு அழற்சி; சவ்வுப்படல அழற்சி : ஊனிர்ச் சவ்வில் ஏற்படும் வீக்கம்.

serosurvey : ஊநீர் ஆய்வு : ஒரு குறிப்பிட்ட நோய் தாக்கப் படக்கூடிய ஆபத்து உள்ளதா என தீர்மானிக்க ஆட்களில் செய்யப்படும் ஊநீர் சார்பான ஆய்ந்தறி சோதனை.

serotherapy : ஊநீர் மருத்துவம் : ஏமக்காப்பு ஊநீர் அல்லது நச் செதிரியை ஊசி மூலம் செலுத்தி தொற்றுக்கு மருத்துவம் அளித்தல்.

scrotum : விந்துச் சுரப்பி தாங்கி.

serotype : ஊநீர் வகை : ஒரு நுண்ணுயிரியின் வகையை அதனுள்ளிருக்கும் விளைவியங்களைக் கொண்டு தீர்மானித்தல்.