பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

மருத்துவ விஞ்ஞானிகள்



கல்வி கற்றபடியே பிறர்க்கு;
ஆசானாகவும் புகழ் பெற்றார்!

ஒரு மாணவனுடைய பெற்றோர்கள் பணம் இல்லாதவர்களாக இருக்கலாம்; கல்வி கற்காதவர்களாகவும் இருக்கலாம். அதற்காக, பெற்ற பிள்ளையை எந்தத் தகப்பனும் தன்னைப் போலவே அறியாமையாளனாக இருக்கவிட எண்ண மாட்டான். எந்த வேலையைச் செய்தாவது தனது கல்லாமை என்ற இழி பெயரைப் போக்கிக் கொள்ளவும். பெற்ற மகனைக் கற்றோர் அவையிலே முன் நிறுத்தும் பெறும் பேற்றைப் பெறு பவனாகவுமே இருப்பான் - வாழ்வான் - அதற்காக உயிரையும் தியாகம் புரியத் தயங்கமாட்டான்! அந்தக் காட்சிகளை நாம் இன்றும் நமது நடைமுறை வாழ்க்கையிலே காண்கிறோம்.

எனவே, ஜோசப் பாஸ்டியரும், அவரது இல்லத்தரசி ஜீன் எடினட் ரோக்யீயும் படிக்காத பாமரர்களாக இருந்தனர் என்பதென்னமோ உண்மைதான்! ஆனால், அத்தகைய வறுமை யாளர்கள் தாம், குலத் தொழிலைச் செய்து சேர்த்த பணத்தைக் கொண்டு லூயி பாஸ்டியரை பாரீஸ் நகருக்கு அனுப்பிப் படிக்க வைததாாகள.

லூயி பாஸ்டியர் மீதும் தவறில்லை. தாய் - தந்தை பாசமுடைய சிறுவன்! அதனால், பாரீஸ் நகரில் பெற்றோர் பாசத்தைவிட கல்வி பெரிதல்ல என்ற சிறுபிள்ளை பாச நேசத்துக்குப் பலியாகி, மீண்டும் தந்தை ஊரான ஆர்பாய் நகருக்கே திரும்பி விட்டான்

ஆனாலும், அன்றாடம் தோல் பதனிடும் கூலியைப் பெற்று வந்த அந்தத் தாயும் - தந்தையும், மகன் படிப்புக்குப் பாரீஸ் நகர் காரணத்தைக் காட்டி நிறுத்தி விடவில்லை.