பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

141


மரீக்கும் இருந்தது. அதனால், படிகங்களைப் பற்றிய ஆய்வறிவும், புதுப்புது செய்திகளும் அவருக்கு உண்டாயின.

ஆய்வு என்றால் சந்தைக் கடை இரைச்சலா என்ன? எனவே, ஆராய்ச்சி புரிவோருக்கு குண்டூசி விழும் ஒசைகூட எழக்கூடாது என்பதை மரீ அறிந்திருந்ததால், லூயி சோதனைக் கூடத்தை அமைதியோடு பாதுகாத்து வந்தார். அவர் கண் பார்வைக்கு ஒர் எறும்புகூட லூயி அறையில் நுழைய முடியாதபடி மரீகட்டுக் காவலோடு இருந்தார்.

லூயி பாஸ்டியர் எந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டாலும் சரி, அந்தச் சோதனையின் ஆழத்திலேயே சென்று கொண்டிருப்பார். மெய் மறந்து போவார்; எந்த முக்கிய நிகழ்ச்சியானாலும் சரி, ஆராய்ச்சிக்கு முன்புதான் நினைப்பார்; பிறகு ஆய்வில் ஈடுபட்டதும் சோதனை அவரை மறக்கடித்து விடும்.

ஒரு முறை ஸ்டிராஸ்பர்க் நகருக்கு ஃபிரான்ஸ் நாட்டு இளவரசர் வருகை தரும் நிகழ்ச்சி ஒன்றிருந்தது. இரசாயனப் பேராசிரியராகப் பணியாற்றும் லூயிஸ் அந்தப் பல்கலைக் கழகம் வழங்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கு பெற்றாக வேண்டுமல்லவா?

எனவே, தனது துணைவி மரீயிடம் பல்கலை தரும் இளவரசர் வரவேற்புக்குத் தானும் மனைவியும் போக வேண்டு மென்று முடிவெடுத்தனர். பிறகு மரீயை அதற்குத் தயாராக இருக்குமாறு லூயி கேட்டுக் கொண்டார். அதற்கேற்ப மரீயும் இளவரசர் நிகழ்ச்சிக்கு போய் கலந்து கொள்ளத் தயராக இருந்தார்.

விழா நடைபெறுதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு லூயி தனது ஆராய்ச்சி சாலையில் புகுந்தார். ஆய்வில் மூழ்கினார். அவ்வளவு தான் விழா நினைவே இல்லாமல் அப்படியே மூழ்கி விட்டார்.

மனைவியை அழைத்துச் செல்வதாக கூறி சோதனைக் கூடத்துக்குள்ளே புகுந்தவரை அழைக்கவோ, எழுப்பவோ, அரைகுறையாக அந்த ஆய்வை விட்டுவிட்டு வரச் செய்யவோ,