பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

169


உறங்கினான்; அவனுடைய உடல் தேறி வந்தது. புதியதொரு தெம்போடு அந்தப் பையன் நடந்தான்; ஓடினான்; ஆடினான்: பேசினான்; உண்டான்; உறங்கினான்! டாக்டர் லூயியிடம் நன்றாகப் பழகினான்.

அவனது தாயாருக்கோ அளவிலா மகிழ்ச்சி இருந்தாலும், லூயி பாஸ்டியருக்கோ சந்தேகம்! என்றைக்காவது ஒரு நாள் இந்தப் பையன் இறந்து விடக் கூடும் என்று நம்பியதால், அவர் கலகலப்பாக யாரிடமும் பேசாமல் ஊமையாக இருந்தார். ஒவ்வொரு நாள் இரவும்-பகலும் லூயிக்கு ஒரு எம யுகமாகவே அமைந்திருந்தது.

அவர் இன்று, நாளை, நாளை மறுநாள் என்று கணக்குப் போட்ட நாட்களிலே எல்லாம் அந்த சிறுவன் ஜோசப் வெற்றி பெற்றுக் கொண்டே வந்தான். டாக்டர் லூயி பாஸ்டியர் தனது கணக்கு தவறித் தவறி ஏமாந்தபடியே இருந்தார்.

நாய் கடிபட்ட பையன் இறக்கவில்லை; நீர்ப் பைத்திய வியாதியிலே இருந்து அந்தச் சிறுவன் தப்பித்து விட்டான். பையனது தாயார் அளவிலா மகிழ்ச்சி பெற்று, லூயியைக் கடவுளாகவே எண்ணிக் கையெடுத்து வணங்கினான்! ஆனந்தக் கண்ணீர் விட்டாள்!

லூயி பாஸ்டியர் வெற்றிக் களிப்பில் இங்குமங்கும் நடந்தார்! பையன் முகத்தைப் பார்த்துப் பார்த்துப் பரவச மடைந்தார்! வெறி நாய் கடியாலே அவதிப்படும் மனித குலத்தின் உயிரைக் காப்பாற்றிட ஒரு மருந்தைக கண்டுபிடித்து விட்டோம் என்ற மகிழ்ச்சியிலே அவர் மிதந்தார்.

ரெபியீஸ் என்ற வெறி நாய்க் கடியினால் உண்டாகும் நீர்ப் பைத்தியத்திற்கு லூயி பாஸ்டியர் மருந்து கண்டுபிடித்து விட்டார் என்ற செய்தி உலகெங்கும் பரவிவிட்டது.

மக்கள், அறிஞர்கள், அறிவியல் நிபுணர்கள், இளம் விஞ்ஞானிகள், லூயி பாஸ்டியரின் விஞ்ஞான மாணவர்கள், பேராசிரியப் பெருமக்கள், அரசு நல்வாழ்வுத் துறை அமைச்