பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

19



எதற்கும் அஞ்சாமல், துணிவே துணை என்று நம்பி, துணிந்தவனுக்குத் துக்கமில்லை. தலைக்கு மேலே சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன என்ற வைர நெஞ்சுரத்தோடு மருத்துவ விஞ்ஞானக் கடலிலே இறங்கி ஆழம் காண நினைத்த வில்லியம் ஹார்வி போன்ற மேதைகள் - உலகுக்கே ஒளியானார்கள். அவரது வரலாற்றைப் படிப்போம் வாருங்கள்.

துணிந்து செயல்பட்ட ஹார்வி;
Father of Cardiology ஆனார்!

விஞ்ஞான ஆராய்ச்சி என்பது ஒரு பெருங்கடல்; அதாவது சமுத்திரம் குடும்ப வாழ்க்கையை ‘சம்சார சாகரம்’ என்பர் சான்றோர். அதைக் கூட சரியான, சமத்துவமான, சுதந்திரமான, வறுமை நீக்கும் பொருளாதாரமான வழிகள் - வளைவு நெளிவுகள் இல்லாமல் இருந்தால் - கடந்து விடலாம் போல் தெரிகிறது.

இதயத் துறை தந்தை : ஹார்வி

ஆனால், அறிவையே முழுக்க முழுக்க நம்பி, ஆராய்ச்சிச் சாகரத்தில் இறங்கினால், அது எத்தகையதோர் ஆபத்து, ஏளனம், ஏகடியம், அவமானம், அரசியல், சமுதாய தண்டனைகள் என்ற சுழல்கள், சூறாவளிகள் ஆகியவற்றில் சிக்கிச் சீரழிந்து, இறுதியாக செர்விட்டஸ் போன்ற இறை ஊழியர்கள் தீக்கிறை ஆகி சாம்பலானது போல - ஆக வேண்டிய ஆதிக்கம், அழுக்காறு நெருப்புக் குண்டங்கள் இன்னும் என்னென்ன எதிர்நோக்க உள்ளனவோ, எப்படியெல்லாம் அவற்றைச் சந்தித்து அனுபவிக்க வேண்டியிருக்குமோ, என்ற அச்சங்களிலே இருந்து ஒரு விஞ்ஞானியால் உயிர் மீள முடியுமா?

மீண்டார் வில்லியம் ஹார்வி என்ற அறிவுத்துறை மீகாமன்! ஆராய்ச்சி என்ற கடலுக்குள் அவர் ஆழம் காண அஞ்சாமல்,