பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 99

பூந்துகில் மரம்: பூந்துகில் என்பது உடை. துறவிகள் உடுக்க மர உரிதரும் மரவுரி மரம் பூந்துகில் மரம் என வேடிக்கையாகச் சொல்லப்பட்டுள்ளது.

பெண் துடரி: இது பின் துடரிச் செடியாகும். துடரி= தொடரி. பெண்’ என்பதற்கும் பின்’ என்பதற்கும் தொடர்பு உண்டு. (பெண்கள் சினம் கொள்ளலாகாது.) 'பெண் புத்தி பின் புத்தி என்பது பழமொழி. இதற்குப் பழி வாங்கும் முறையில் ஆண்புத்தி சாண்புத்தி' என்பர் பெண்டிர் சிலர். எனவே, சொல் விளையாட்டாகப் பின்துடரிச் செடி, பெண் துடரி எனப்பட்டது.

இதற்கு இன்னொரு வகைச் சொல் விளையாட்டு விளக்கமும் தரலாம். தெருவிலோ - வழியிலோ ஆனும் பெண்ணும் செல்லும்போது, ஆண் முன்னே செல்லப் பெண் பின்னே தொடர்வது நினைவு கூரத்தக்கது. இம் முறையிலும் இப்பெயர்ப் பொருத்தம் நன்று.

பேதி வாளம்: நீர் வாளக் கொட்டை பேதி மருந் தாதலால், பேதி வாளம் எனப்பட்டது. பயன்.

போசனக் குறடாச் செடி : சிலர், கூழ், பழையது, தயிர்மோர் சோறு முதலியன உட்கொள்ளும்போது இடை யிடையே மிளகாயைக் கடித்து உண்பர். இங்கே மிளகாய் குறடாபோல் வேலை செய்கிறது. எனவே, மிளகாய் போசனக் குறடா வாயிற்று. பயன்.

மச்சங் கொல்லிச் செடி. இது புகையிலைச் செடி. புகையிலையின் புகை சில புழு பூச்சிகளைக் கொல்லும்; ஒரு வேளை மச்சம் எனப்படும் மீனின்மேல் புகை யிலையோ-புகையோ படினும் மீன் இறக்குமோ? அதனால் புகையிலை மச்சங் கொல்லி எனப்பட்டிருக்குமோ? செயல்.