பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 101

முக்கண்ணனிளையோன்: முக்கண்ணன் = மூன்று கண்களையுடைய தேங்காய்; தேங்காயில் இளையவன் = இளநீர்; எனவே, இளநீர், முக்கண்ணன் இளையோன் எனப்பட்டது. வடிவம்.

முடிமேல் முடி: இது தும்பை, இது பிள்ளையாருக்கு (விநாயகருக்கு) உரியது. சைவர் கொள்கையின்படி, பிள்ளையார் தெய்வங்களுள் மேலானவர். விநாயகர் = மேலான தலைவர். கணபதி, கணேசன் = தெய்வகணங்க ளின் தலைவர். இப்பெயர்கள் எல்லாம் விநாயகருக்கு உள்ளமையால் அவரது மேன்மை புலனாகும். மக்கள் மட்டுமன்றி, மற்ற கடவுளரும் பிள்ளையாரை வணங்கியே எந்தச் செயலையும் தொடங்க வேண்டுமாம். பிள்ளையாரின் தந்தையாகிய சிவனும் இதற்கு விதிவிலக்கு ஆகார். அவர் திரிபுரம் எரிக்கத் தேரில் சென்றபோது, பிள்ளையாரை வணங்கிச் செல்லாததால், பிள்ளையார், அவரது தேரின் அச்சைத் தூள்தூளாக்கி விட்டாராம். இதனை, அருணகிரி நாதரின் திருப்புகழில் உள்ளதும் பிள்ளையார் காப்புப் பாடலுமாகிய 'கைத்தல நிறைகளிை' என்று தொடங்கும் பாடலில் உள்ள

முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்

அச்சது பொடிசெய்த அதிதீரா'

என்னும் பகுதியால் அறியலாம். எனவே, பிள்ளையாரை வணங்கும்போது எல்லாருடைய முடியும் பிள்ளையாரின் முடிக்குக் கீழே தாழும்; பிள்ளையாரின் முடி மேலே இருக்கும். இதனால், மற்றவரின் முடிகளில் உள்ள மலர்கட்குமேலே, பிள்ளையாரின் முடிமேல் தும்பை மலர் இருக்கும். அதனால், தும்பை முடிமேல்முடி’ என்னும் சிறப்புப்பெயர் பெற்றது. சார்பு.