பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 மர இனப் பெயர்கள்

سس س----------سسسست --مم-سساسسه

இதற்கு மற்றும் ஒரு பெயர்க் காரணம் கூறமுடியும். வெற்றிக்காகப் போர்மேல் செல்லும் வேந்தர்கள் தம் முடிமேல் தும்பைப் பூவை முடித்துக்கொண்டு செல்வர் என்பது, தமிழ் மொழியில் உள்ள புறப்பொருள் இலக்கணச் செய்தியாகும், இந்த வகையிலும், தும்பைப் பூவுக்கு முடி மேல் முடி’ என்னும் பெயர் பொருந்தும்.

மூவிலை முன்னை = சிறு முன்னை, மூன்றிலைக்கொத்து உடையதாதலின் இப்பெயர்த்து. வடிவம்.

மூவிலைப் பயறு: நரிப்பயறு மூலிகையும் மூன்று இலைக் கொத்துடையது. வடிவம். இது நரிப்பயறு.

மேகராணிக் குருந்து மரம்: மயில் மேகத்தைக் காணின் ராணிபோல் (அரசிபோல்) மகிழ்ந்தாடும்; ஆதலின் மயில் மேகராணியாகும். அதன் காலடிபோல் இருக்கும் அடி மரத்தையுடைய மயிலடிக் குருந்து மரம் சொல்விளையாட் டாக, மேகராணிக் குருந்து மரம் எனப்பட்டது.

வண்டுணா மரம்: வண்டு தேன் உண்ணாத மலர்களை யுடைய வேங்கைமரம் வண்டுணாமரம் எனப்பட்டது. சார்பு.

சண்பகமும் வேங்கையும் வண்டுணா மலர்மரம்’

(4–81)

என்பது திவாகர நிகண்டு நூற்பா,

வயிரவிச் சாரணை . சத்திக்கு (தேவிக்கு) வயிரவி என்ற பெயர் உண்டு. எனவே, சத்தி சாரணைக்கொடி, சொல்விளையாட்டாக, வயிரவிச் சாரணை எனப்பட்டது.

வள்ளல் கீரை: வள்ளல் என்பதற்கு வல்லமை என்னும் பொருள் உண்டு. இதிலிருந்து உன் வள்ளல் (திறமை)