பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 103

தெரிந்து போயிற்றே" - என்று உலக வழக்கில் மக்கள் ஒருவரை நோக்கி யொருவர் உரைப்பதுண்டு. வல்லாரை என்பதன் அடிச்சொல் வல்' என்பதாகும். அதாவது வலிமை தரும் - வலிமை உள்ள கீரை என்பது பொருளாம். எனவே, வல்லாரை, வள்ளல் கீரை எனப்பட்டது. பயன். ஈண்டு

' வல்லாரை கற்பமுண வல்லாரை யார்நிகர்வர்' என்னும் தேரன் வெண்பாப் பாடல் பகுதி கருதற்பாற்று.

வற்கலப் பட்டை வற்கலை = மர உரி. மர உரியாகப் பயன்படும் பட்டை வற்கலப் பட்டை எனப்பட்டது.

'வற்கலையின் உடையானை மாசடைந்த மெய்யானை’’ என்னும் கம்பராமாயணம் - கங்கைகாண் படலப் பாடல் பகுதி காண்க.

வாடாப்பூ = பனம் பூ, தென்னம் பூ ஆகியவை வாடுவ தில்லை. வடிவம்.

வாத நாசனி: கொடிக் கள்ளி, வாதம் - வாயுபோக்கு மாதலின் இப்பெயர்த்து. பயன்.

வானமுட்டி மரம் - வான்முட்டி மரம்: இது நெட்டி லிங்க மரம். இது வானளாவ உயர்ந்து நெட்டையா யிருக்குமாதலின், நெட்டிலிங்க மரம் எனவும், வானமுட்டி மரம் எனவும் பெயர் பெற்றது. அழகுக்காக மாளிகை களிலும், பூங்காக்களிலும் இது வளர்க்கப்படும். அசோகு வகையைச் சேர்ந்தது இது. வடிவம்.

விடையூர்திச் செடி விடை = காளைமாடு; ஊர்தி = வாகனம்; காளையை ஊர்தியாக உடையவன் சிவன், சொல் விளையாட்டாகச் சிவகரந்தை இப்பெயர்த் தாயிற்று.

விண்மணிச் செடி விண்ணில் மணிபோல் (மாணிக்கம் போல்) சுடர் விடுவது சூரியன் (ஞாயிறு); அதனால்