பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 மர இனப் பெயர்கள்

ஞாயிறு விண்மணி எனப்பட்டது. இச்சூரியனை நோக்கித் திரும்பும் சூரியகாந்திச் செடி, விண் மணிச் செடி எனப் பட்டது. சார்பு.

விசுவாமித்திரன் புல் இது தருப்பை. விசுவம் = எல்லாம்; மித்திரன் = நண்பன் = வேண்டியவன்; எல்லா ருக்கும் வேண்டியவன் - விருப்பமானவன் என்பது விசுவா மித்திரன் என்பதன் பொருள். விசுவாமித்திரன் புல் என்றால் எல்லாரும் விரும்பும் புல் என்பதாம். தருப்பை யில் பத்து வகை உண்டென அபிதான சிந்தாமணி கூறுகிறது. அவை: தெர்ப்பை என்னும் புல், நாணல், யவைப்புல், அறுகு, நெற்புல், விழல், மற்ற தானியங்களின் புல், மருள்மட்டை, சவட்டைக் கோரை, கோதுமைப் புல், ஆகியவை. இவற்றை எல்லாரும் விரும்புவர். தருப்பை என்பதற்கே புல் என்பதே பொருள். தருப்பைக்கு விசுவா மித்திரன் புல் என்பது சார்பால் வந்த பெயர். -

வெகு ரசத்தட்டை சுவையான சாற்றை (ரசத்தை உடைய கரும்புத் தட்டை இப்பெயர்த்து. பயன்.

வெந்த நெல்லரிசி: நெல்லை வேக வைக்காமல் குற்றி எடுக்கும் அரிசி பச்சை அரிசி எனப்படும்; வேக வைத்த வெந்த நெல்லிலிருந்து எடுக்கும் அரிசி புழுங்கல் அரிசி' எனப்படும். எனவே, புழுங்கலரிசி, வெந்த நெல்லரிசி எனப் பட்டது. உடற்கூறு.

வெளித் தாமரை: வெளி = விண் = ஆகாயம். எனவே, ஆகா(ச)த் தாமரை சொல் விளையாட்டாக வெளித் தாமரை எனப்பட்டது. இது, நீரின் கீழே வேர் விடாமல், ஆகாயத்தை நோக்கியபடி நீரின் மேலேயே இருப்பதால் ஆகாசத் தாமரை எனப்பட்டது. சார்பு.

வேணுபலம்: வேணு = மூங்கில்; பலம் = பயன்; எனவே, மூங்கில் அரிசி வேணுபலம் எனப்பட்டது. சொல் விளையாட்டு.