பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 109

போடும்போது, உன்னைச் சதை சதையாகப் பிய்த்து விடுவேன் எனத் திட்டிக் கொள்வதுண்டு. ஒரே வெட்டில் சாகடிப்பதனினும் சதை சதையாகப் பிய்ப்பதால் நோவு (நோக்காடு) மிகுதியாகும். அதுபோல் மஞ்சள் சிதைக்கப் படுவதால் இப்பெயர் பெற்றதோ ? சார்பு.

பல்லிணர்: இணர் = தளிர், பூங்கொத்து. சதுரக்கள்ளி பல தளிர்க் கொத்துக்களை உடைமையால் சினையாகு

பெயராய்ப் பல்லினர் எனப்பட்டது. வடிவம்.

பிண்ட புட்பம்: அசோகு இது. அசோகு பிண்டமாகதிரட்சியாக-கொத்தாகப் பூக்கும். அதாவது, அசோக மலர்கள் அடர்த்தியாக அமைந்து, செயற்கையாகத் திரட்டிக் கட்டித் திருமணத்தில் கொடுக்கும் பூச்செண்டுபோல் இருக்கும். இப்படியிருப்பதுதான் பிண்டம். எனவே, அசோகு, பிண்ட புட்பம் (மலர்) உடைமையால் சினையாகு பெயராக இப்பெயர் பெற்றது. பயன்.

புட்ப காதம்: மூங்கில் இது. காதம் என்பது நீண்ட தொலைவைக் குறிக்கும். இங்கே, நீண்டகால இடைவெளி யைக் குறிக்கிறது. மூங்கில்களுள் சில, தோன்றிய இருபது ஆண்டிலிருந்து ஐம்பது ஆண்டு வரையும் உள்ள கால எல்லைக்குள் எப்போதாவது ஒரேமுறை பூத்துப் பின் அழியும்; சில இனங்கள் மூன்றாண்டுகட்கு ஒருமுறை பூக்கும். இவ்வாறு, பூக்கும் கால இடைவெளி, இட இடைவெளி போல் நீட்டித்திருப்பத: ல், மூங்கில் புட்ப காதம் எனப் பட்டது. காலம்.

புறம்பனை ; புறம்பணை முல்லை நிலத்தைக் குறிக்கும். இந்நிலத்தில் முல்லைக்கொடி வளர்வதால் இடவாகுபெய ராகப் புறம்பணை எனப்பட்டது. சார்பு.

பொற்காசு. இது காணம் என்னும் கொள்ளுப் பயறாகும். இப்பயறு ஒவ்வொன்றும், பண்டைக்காலத்தில்