பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 111

செய்க. எனவே, திப்பிலிக்கு வைத்தி என்னும் பெயர் பொருந்தும். பயன். .

வைத்திய மாதா: ஆடாதோடை இது. மருத்துவம் செய்யும் தாயாக நின்று ஆடாதோடை நோய் நாடாமல் செய்துவிடுமாம். பெயர் தெரியாத மருத்துவ ஒலைச் சுவடியொன்றில் உள்ள பாடல்:

' ஆடாதோடையின் குணத்தை அடைவுடன்

உரைக்கக்கேளும்; பாடாத நாவும் பாடும்; பரிந்துமே தோடம்போகும்; வாடாத பித்தம் சேத்ம ரோகங்கள் விலகிப்போகும்; நாடாது வியாதி தானும்; நல்விழிக் குழலினாளே”

ஆடாதோடைக்குப் பயன் பற்றி வைத்திய மாதா என்னும் பெயர் வந்தது.