பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 117

சிஞ்சை வித்துரி=இது புளியங்கொட்டைத் தோல். சிஞ்சை=புளி; வித்து = விதை-கொட்டை, உரி=தோல். எனவே, இது சொல்விளையாட்டாக வந்த பெயராகும்.

சிநேக பலம் = எள்ளு (எள்) என்னும் தானியம் சிநேகிதன் (நண்பன்) போல உதவுவதால் சிநேகபலம் எனப்பட்டது. வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணிய னுக்குக் கொடு” என்பது ஒரு பழமொழி. வாணியன் எள்ளைச் செக்கில் இட்டு ஆட்டி எண்ணெய் தருபவன். இது நல்லெண்ணெய். தமிழ் நாட்டு மக்கள், கிழமைக்கு (வாரத்திற்கு) ஒரிரு முறை நல்லெண்ணெய் தேய்த்துத் தலை குளிப்பது ஈண்டு நினைவு கூரத்தக்கது.

சிரஞ்சீவி =இது இலவமரம். இலவம் பஞ்சு மெத்தென் றிருக்கும்; விரைவில் நீரில் நனையாது; எதிலும் ஒட்டிக் கொள்ளாது. எனவே, இலவம் பஞ்சால் தலையணை, மெத்தை செய்வதுண்டு. ஒளவையார் ஆத்திசூடியில் 'இலவம் பஞ்சில் துயில் (26) என்று கூறியிருப்பது ஈண்டு எண்ணத்தக்கது. சிரம் = தலை. தலையணையாக உதவுவது இலவம் பஞ்சு என்பதால், சொல்விளையாட்டாக இதற்குச் சிரஞ்சீவி எனும் பெயர் வந்திருக்குமோ? வேறு பொருத்த மான காரணம் தெரியவில்லை சிரஞ்சீவி என்பதற்கு நீண்ட நாள் வாழ்பவர் என்பது பொருள். இம்மரம் நீண்ட நாள் இருப்பதானாலேயே இப்பெயர் பொருந்தும் (?)

சிருங்காரம்=கிராம்பு இது. சிருங்காரம்= காதல் சுவைபுணர்ச்சி. கிராம்பு காம உணர்ச்சியைத் தூண்டுமாதலின் "சிருங்காரம் எனப்பட்டது. பயன்.

சிவாலயம் = செந்துளசி இது. சிவப்பாயிருப்பதால், செந்நிறச் சிவனது இருப்பிடமாக - சிவாலயமாக இது கூறப்பட்டுள்ளது. நிறம் வடிவம்.