பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 மர இனப் பெயர்கள்

மாம். அதனால் செந்து நாசனம் எனப்பட்டது. பாடல்தேரையர் குணபாடம்:

" ... சருவ காளம், விருச்சிகம் கீடம்மா...... உதிரப்பூச்சி, சிலேத்துமத் துறும்வலி...... மாயும் நாறுநற் காயம் கிடைக்கினே' காளம் - பாம்பு; விருச்சிகம் = தேள்; இவற்றின் நஞ்சைப் போக்கும். உதிரப் பூச்சி = குருதியிலே உள்ள வேண்டாதநோய் விளைவிக்கும் சிறு நுண் உயிர்கள். பெருங்காயத் தால் இவை மாயுமாம்.

சேவுையரிசி: இந்தக் காலத்தில், மங்கல நிகழ்ச்சிகளின் போது, வாழ்த்துதலின் அறிகுறியாக, நெல்லரிசி சேவுை யரிசியாக (வாழ்த்தரிசியாக) இடப்படுகிறது. இதனினும், அறுகம்புல் அரிசியைச் சேவையாக இடுதலே சிறந்ததென முன்பு பின்பற்றப்பட்டு வந்தது. அதனால் அறுகம்புல் நுனியில் இருக்கும் அறுகரிசி சேவுையரிசி எனப்பட்டது.

பயன்.

தபன மணி: தபனன் = ஞாயிறு. எனவே தபனனை நோக்கும் சூரியகாந்தியின் பெயர் இது. சார்பு.

தரு சீவநம்: தரு = மரம்; மரம் சீவிப்பதற்கு - வாழ்வ தற்கு வேண்டிய நீர், ஆற்றல் பொருள் ஆகியவற்றைக் கொண்டுவந்து கொடுப்பது வேர். எனவே, மர வேர் இப் பெயர் பெற்றது. பயன்.

தாலபத்திரம் = தாலம் = புல்மரம் - பனை. பனை யோலை தால பத்திரமாம். மொழிபெயர்ப்பு. சொல் விளையாட்டு.

திரிபுரம்: திரிபுரம் என்றதும் எரிபட்ட தீ - வெப்பம் நினைவுக்கு வரும். சத்தி சாரணை (சாறணை-சாறடை)