பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 121

வெப்பம் தருவதால் இப்பெயர் பெற்றது. சொல் விளையாட்டு,

அ.கு.பா.பாடல்:

“ சீதம், சலதோடம், தேமல், தழும்பு, குன்மம்,

வாதம், சிறுசிரங்கு, வன்மேகம் - ஒதரிய காசமுதல் நோயெல்லாம் கான்சாறடைக் கிழங்கால் நாசமுறும் என்றே நவில்”

சிதம், சலதோடம், காசம் போகும் என்பதால் இதன் வெப்பம் புலப்படும்.

திரியட்சி: திரி = மூன்று; அட்சி = கண் உடையது; மூன்று கண்ணுடைய தேங்காய். வடிவம்.

திருகுபலை வலமாகத் திருகி முறுக்கியிருக்கும் வலம்புரிக்காய் (நந்தியாவட்டம்) இது. வடிவம்.

தீபம்: இரவில் நெருப்பு எரிவதுபோல் தோன்றும் இரவு எரி மரம் (சோதிமரம்) இது. வடிவம்.

துண்டு: புகையிலை பயன்படுத்துவோர், புகையிலை வணிகர், புகையிலை விளைப்பவர் ஆகியோரிடை வழங்கப் படும் சொல் 'துண்டு' என்பது. இரண்டு பெரிய சிப்பம் - அல்லது நான்கு சிறிய சிப்பம் கொண்ட ஒரு புகையிலைக் கட்டு, ஒரு துண்டு எனப்படும். துண்டிக்கப்பட்ட - பிரிக்கப் பட்ட ஒர் அளவு துண்டு ஆகும். சார்பு, -

தொங்கி : தொங்குதல் என்பதற்குத் திருடுதல் என்னும்

பொருள் உண்டு. தொங்கன் என்பதற்குக் கள்ளன் என்னும் பொருள் யாழ்ப்பாண அகராதியில் கூறப்பட்டுள்ளது. தொங்கன் கள்ளன் எனில், இதன் பெண்பாலாகிய தொங்கி கள்ளி என்பது புலனாகும். கள்ளத்தனம் உடையது கள்ளி. இப்பெயர், கள்ளிச் செடிக்கு இருபொருள் தரும் சொல் விளையாட்டாகச் சூட்டப்பட்டுள்ளது,