பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 மர இனப் பெயர்கள்

நட்சத்திரக் கண்டகி: கண்டகம் = முள்; கண்டகி = முள் உடையது. அன்னாசிப் பழம் மேலே முள்போன்ற உறுப்பு உடையது. அது நட்சத்திர (விண்மீன்) வடிவில் தோற்றமளிக்கிறது. அதனால், அன்னாசி நட்சத்திரக் கண்டகி எனப்பட்டது. வடிவம்.

நரம்பன்: புகையிலை வகையில், நரம்பு தடிப்பாக நிரம்ப உள்ள ஒருவகை உண்டு. எனவே, அவ்வகைப் புகையிலை நரம்பன்' எனப் பெயர் பெற்றது. நரம்பும் சுருட்டில் சேர்க்கப்படுவ துண்டு.

நாகேசுரம். இது சிறுநாகப்பூ. நாகம் படம் எடுத்த வடிவில் இருக்கும் இது. நாகேசுரன் = சிவன். சிவன் சோயில் உன்ள திருநாகேசுரம் என்னும் ஊர் ஒன்றும் உண்டு, எனவே, சொல்விளையாட்டாக இப்பெயர் ஏற்பட்டது.

நான்முகப் புல்: இது நாணல். பத்துவகைத் தருப்பை களுள் நாணல் புல்லும் ஒன்றென்பது 'விசுவாமித்திரன் புல்” என்னும் தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது. மக்கட்குப் புரோகிதச் சடங்கு செய்யும் ஐயரிடத்தில் தருப்பை கை யிருப்பில் இருக்கும். தேவர்களின் புரோகிதர் நான்முகன் (பிரமன்). சிவனது திருமணத்தை நடத்தி வைத்தவர் நான்முகனே. எனவே, அவரிடத்தும் தருப்பை இருக்கும். இத்தகைய சார்பு காரணமாக, நாணல் புல் நான்முகப் புல் எனப் பெயர் பெற்றிருக்கலாம். சார்பு.

நீராடல்: தேங்காய் இது, தேங்காய் வாங்குபவர்கள், நல்ல தேங்காயா என்று அறிய ஆட்டிப்பார்ப்பது வழக்கம். நீராடுவது தெரிந்தால் நல்ல தேங்காய் எனப்படும். இவ்வாறு, நீராடுவதால் தேங்காய் இப்பெயர்த்தாயிற்று. உடற்கூறு.