பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 123

நீர் நாய்: மாமரம் இது. நீர் நாயின் மேல் தோல் அமைப்பும், நிறமும் மாமரத்தோடு ஒத்திருத்தலின், மாமரம் நீர்நாய் எனப்பட்டது. ஒப்புமை. நீர்நாய் உடம்பில் மேல்தோல் பிரம்புக்கொடிபோன்ற கோடுகளை உடையதா யிருக்கும். இதனைக் குறுந்தொகையில் உள்ள

' அரில் பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய்

வாளை நாளிரை பெறு உம் ஊரன்’ (364-1, 2)

(பவர் = கொடி, வரி = கோடு, புறம் = மேல் பகுதி) என்னும் பாடல் பகுதியால் அறியலாம். நீர்நாய் பிரப்பங் கொடிப் புதரில் தங்கிவாழும் என்பதை அகநானூற்றில்

உளள,

' வாளை மேய்ந்த வள்ளெயிற்று நீர்நாய்

முள்ளரைப் பிரம்பின் மூது அரில் செறியும்’-(6-18,19)

(அரில்=புதர்) என்னும் பாடல் பகுதியால் அறியலாம்.

பல்லி எங்கு எதில் தங்கி வாழ்கிறதோ அதன் நிறமா யிருக்கும். இவ்வாறு உயிரிகள் பலவும் இருக்கும். அதே போல், பிரப்பம் புதரில் வாழும் நீர்நாயின் உடலும் பிரப்பங்கோடு உள்ளதுபோல் இருக்கும். பிற வலிய விலங்குகளினின்றும் தப்பிக்க, உருவம் தெரியாதபடி இப்படி யிருக்கும். இதனை இயற்கையின் தேர்வு’ (Selection of Nature) என்பர். எனவே, இந்த நீர்நாயின் மேல்தோல் போன்ற மேல்பட்டையுடைய மாமரம் நீர்நாய்' எனப்

பட்டது எனலாம்.

இதற்கு வேறொரு காரணமும் கூறலாம். நீரில் மறைந்திருந்து வாளை மீனைப் பிடிக்கும் திருட்டு நீர்நாய் போல், சூரபதுமன் முருகனை ஏய்க்கக் கடலில் பொய் மாமரமாக வடிவுகொண்டு நின்றானாதலின் ஒப்புமையால் இப்பெயர்த்தாயிற்று என்றும் கூறலாமோ? ... -