பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 மர இனப் பெயர்கள்

நீலபத்திரம்: நீலமும் கருமையும் ஒப்பானது. எனவே, கருங்குவளை நீலபத்திரம் எனப்பட்டது. கருங்குவளைக்கு நீலோற்பலம் என்னும் பெயரும் உண்டு. நிறம்.

நீலப்புடவி: விஷ்ணு (திருமால்) நீலவண்ணன்; எனவே, விஷ்ணு கரந்தை நீலப்புடவி எனப்பட்டது. நிறம்.

நீல புட்பம் - நீல புட்பிகை: நீலநிறப் பூவுடைய அவுரி, எட்டி, விஷ்ணு கரந்தை ஆகியவை இப்பெயர்கள் பெற்றன. நிறம்.

நெடுமி: நெடுமையாக - நீண்டதாக இருக்கும் எந்த மரமும் நெடுமி எனப்படும்.

பத்திர யெளவனம்: பத்திரம் = இலை; யெளவனம்= இளமை; இலையின் இளமை பத்திரயெளவனம் ஆகும். இலையின் இளமை என்பது தமிழில் தளிர் என்பதாகும். வடமொழியில் உள்ள பத்திர யெளவனம் என்னும் பெயரைவிட, தமிழில் ஒரே சொல்லாக உள்ள தளிர், துளிர் என்பன சுவையாக உள்ளன அல்லவா? வடமொழிப்

பெயர்.

பரம்பிரம்ம சைலம்: அவுரிச் செடியிது. பரப்பிரம்மம் = கடவுள் = இங்கே திருமால், சைலம் = மலை; திருமால் அமர்ந்திருக்கும் மலை என்பது பொருள். அவுரி நீலம் தருவதாதலின், அதனை, நீல வண்ணனாகிய திருமாலின் மலை என்றனர் போலும்!

நீலம் - கருமை - பச்சை என மூன்று நிறமாகவும் திருமால் சொல்லப்படுவார். இம்மூன்றையும் ஒத்த நிறங் களாகச் சொல்வது இலக்கிய மரபு. ஈண்டு, தொண்டரடிப் பொடி யாழ்வாரின் திவ்வியப் பிரபந்தப் பாடல் பகுதி யொன்று கருதற்பாலது: