பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 மர இனப் பெயர்கள்

பூதகி. அத்திக் காய் இது. பூதகி = பூதம்போல் பருத்து இருப்பவள். அத்திக் காயைவிட மிகப்பெரிய காய் கள் உள. ஆனால், பூவாது காய்க்கும் தன் இனமாகிய ஆல், அரசு ஆகியவற்றின் காய்களினும் அத்திக்காய் பருத் திருப்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம். அல்லது, அத்தி என்றால் யானை, யானையளவு பெரிய காய் என்பது போலச் சொல் விளையாட்டாகப் பூதகி என்னும் பெயர்

தரப்பட்டிருக்கலாம்.

பூப்பருத்தி: இது பூவரசு. பருத்தி = பருத்திருப்பது. பூவரசம் பூ, எத்தனையோ பூக்களினும் மிகவும் பருத்தது பெரியது - ஆதலின், சொல் விளையாட்டாகவும் வடிவு காரணமாகவும் பூப்பருத்தி எனப்பட்டது. பருத்தி (பஞ்சுச் செடி) என்ற இருபொருள் நயமும் மயக்குகிறது.

பொய்: மரப் பொந்துக்குப் பொய்’ என்னும் பெயர் பிங்கல நிகண்டில் தரப்பட்டுள்ளது. பொய் என்பது இல்லாதது தானே! பொந்து என்பதும் ஒன்றும் இல்லாதது தானே! வடிவு.

போகி: பூ அரும்பு இது. அரும்பு மலராய் விரிய, ஆண்பாகமாகிய மகரந்தத் தூள் மலரில் விழ, பூ கருவுற்றுக் காய்க்கிறது இந்தக் காதல் போகத்தை உடைமையால், அரும்பு போகி எனப்பட்டது என்று கூறலாமோ உடற் கூறு - செயல்.

மட்டம்: கரும்பு, வாழை ஆகியவற்றின் கீழ்க் கன்றுகள், தாயினும் அளவில் மட்டமாயிருத்தலின் மட்டம் எனப் பட்டன. உடற்கூறு. பொதுவாக, கீழ்க் கன்றுகளோ, புதிய கிளைக் கப்புகளோ வெடித்துத் தோன்றுவதற்கு மட்டம் வெடித்தல்’ என்னும் பெயர் உண்டு. மட்டம் என்பதற்குச் சமநிலை என்னும் பொருளும் உண்டு. தாய்க் கரும்பும்