பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 127

தாய் வாழையும் அழியினும், மீண்டும் அவ்விழப்பை ஈடு கட்டி முன்னிருந்த அளவுக்குச் சமநிலையை ஏற்படுத்துவ தாலும் மட்டம் என்னும் பெயர் இவற்றிற்கு வந்திருக் கலாம்.

மணவலி = மிக்க மணம் (வாசனை) உடையதாதலின் மருக்கொழுந்து மண வலி எனப்பட்டது. மரு என்பதற்கு மணம் என்னும் பொருள் உண்டு. ஈண்டு வலி என்பது, வலிமை மிக்கது என்னும் பொருளில் உள்ளதாகக் கொள்ள லாம். அதாவது, மணம் மிகுதி.

மது திருமணம் = இது கரும்பு. மது என்பதற்கு, தேன், கள், பால், இனிமை முதலிய பொருள்கள் உண்டு, திருமணம் என்பது சேர்க்கை;

' மணத்தல் கூடுதல்” என்பது திவாகர நூற்பா. எனவே, இனிய சுவை நீர் சேர்ந்திருப்பது கரும்பு என்னும் பொருளில், இதற்கு ‘மது திருமணம் என்றும் பெயர் வைக்கப்பட்டிருக்கலாம். மற்றும், திருமணம், ஊர் விழா முதலிய மங்கல நிகழ்ச்சி நடை பெறும் இடங்களில், கமுகு, வாழை, கரும்பு முதலியன நட்டுக் கட்டுதல் உண்டு. காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழா நடைபெற்றபோது இவை இடம் பெற்றதாக மணிமேகலை கூறுகிறது. விழாவறை காதை :

' காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்

பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின் - (46, 47)

என்பது பாடல் பகுதி. தென்னை, பனை, ஈந்து ஆகியவை மதுவுக்கு உரியன எனினும், கரும்பின் மது (கருப்பஞ்சாறு) போல உடனே கிடைக்காதல்லவா? எனவே, கரும்புக்கு

↑Ꮢ: *

இப்பெயர் பொருந்தும், உடற்கூறு.