பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 மர இனப் பெயர்கள்

மதுரசப் பீலி = இது பெருங்காயம். பெருங்காயம் கரைத்த நீர் மதுரசம் போல் ஒருவகை மணம் உடைய தல்லவா? பீலுவது பீலி.

பீலுதல் = பீய்ச்சுதல் = பீரிடுதல் = வெளியிடல்.

மதுரசம் போன்ற மண நீர் உண்டாக்கலாம். ஆதலின் இது இப்பெயர் பெற்றது. உடற்கூறு.

மாதவப் பிரியம் = பூசணியிது. மாதவம் என்பதற்கு இளவேனில், இனிமை, மது, பெரியதவம் என்னும் பொருள் கள் உண்டு. பூசணி இளவேனிலில் இராது. இனிமை தருவது எனலாம். பூசணியால் இனிப்பு (காசி அல்வா - பூசணி அல்வா) செய்வதுண்டு. அதனால் இப்பெயரா? அல்லது, பெரிய தவசிகள் பிரியப்பட்டு உண்ணுவது என்பது பொருந்துமா? புரோகிதச் சடங்கு செய்யும் ஐயருக்குப் பூசணிப் பற்றை தருவது ஈண்டு நினைவுகூரத் தக்கது. உடற்கூறு, சார்பு.

மாமுநி = நாயுருவி இது. வேலூர் கண்ணப்பர் இது பற்றிக் கூறியிருப்பது: இது தெய்வத் தன்மை யுடையது; புதனுக்கு உரிய பூ; அட்ட கர்ம மூலிகை; இதன் இலையைக் காப்புகட்டி மந்திரம் செபித்து, ஆசாரத்துடனும் குருபக்தி யுடனும் எடுக்கவேண்டும். நாயுருவி இலையைக் காய வைத்து எரித்துச் சாம்பலாக்கிப் பதமாகப் பயன்படுத்த வேண்டும். நாயுருவியின் சிறப்பை, பெரியோர்களின்(முனிவர் களின்) கால்களைப் பிடித்துவிட்டுப் பணி செய்து வழிபட்டு அவர்களிடம் தெரிந்துகொள்ள வேண்டும்-என்றெல்லாம் கூறி நூல் பெயர் தெரியாத பாடல் பகுதி யொன்றும் தந்துள்ளார்.

' காயுருவிச் சருகு அருந்தும் பெரியார் மாட்டுக்

கால்பிடித்துப் பணிபுரிந்து கண்ட பாகம்