பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 மர இனப் பெயர்கள்

வெந்தல் = வெந்தயம்- கருகியது; வெந்தித்தல் = சினத் தல் - சூடாதல்; வெந்திப்பு = கொதிப்பு - சினம், இ.சா.

' வெந்திப்புடன் வரும் அவுணேசனையே’ (136) என்னும் திருப்புகழ் பாடல் பகுதி காண்க. அவுணேசன்= அரக்கர் தலைவனாம் சூரபத்மன். அவன் வெந்திப்புடன் (சினத்துடன் - முனிவுடன்) வருகிறானாம், வெந்தயம் என்பதை வெந்த அயம் எனவும் பிரிக்கலாம். அயம் = இரும்பு, வெந்த அயம் = இரும்பு வெந்து நீறாகிப் போன தூள். ஈண்டு, தனிப்பாடல் திரட்டுப் பாடலொன்று நினை விற்கு வருகிறது:

' வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவ

தென்ன இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்துச் செட்டியா ரே'.

வெங்காயம் = கொடிய உடம்பு; சுக்கு ஆனால் = சுக்கு நூறாகிவிடின்; வெந்தயத்தால் (வெந்தசாம்பலால்) ஆவதென்ன = வரும் பயன்யாது. திருவேரகத்தில் உள்ள செட்டியாராகிய முருகனே! சீரகமாகிய (சீர்+அகம்) வீட்டுலகத்தைத் தந்தீரானால், மீண்டும் இந்தப் பெருங் காயம் (பெரிய உடல் பிறவி) தேடி எடுக்கமாட்டேன் என இருபொருள் அமைந்த பாடல் இது. இங்கே, வெந்தயம் என்பதற்கு, வெந்த சாம்பல் என்பது பொருள், முனிந்து உரைப்பவர்கள், 'நீ வெந்து சாம்பலாகப் போக’’ எனச் சாமொழி (சாபம்) இடுவது உண்டு. எனவே, வெந்தயம், முனிந்துரை என்னும் பெயரைச் சொல் விளையாட்டாகப் பெற்றுள்ளது.

மையுடை = இது கருவேல மரம். மை = கருமை. வேலமரத்திற்கு 'உடை' என்னும் ஒரு பெயர் உண்டு.