பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 131

எனவே, கருவேலமரம் மையுடை எனப்பட்டது. நிறம்

வடிவு.

யானைத் தடிக்கா - யானைத் தடிச்சல் = இவை புளி நறளைக் கொடி. இதன் கிழங்கு தடியாய்ப் பருத் திருக்கு மாதலின் இப்பெயர்கள் பெற்றது. வடிவம்.

யுக பத்திரிகை = அசோக மரம் இது. யுகம் = நெடுங் காலம். அசோகு நீண்ட காலம் இருப்பதெனில் இப்பெயர் பொருந்தும். இன்னொரு பெயர்க் காரணமும் உண்டு. யுகம் = இரண்டு = இரட்டை (Pair). பத்திரிகை = இலை. அசோக மரத்து இலைகளைப் பார்த்தால், இணை இணை யாக -இரட்டை இரட்டையாக (ஜோடி ஜோடியாக) இருப்பது தெரியும். அதாவது, கிளையில், வலப்புறம் ஒரிலையும் அதற்குச் சம நேராக இடப்புறம் ஒன்றுமாக, அடியிலிருந்து மேல் வரையும் இருக்கும். இதனால் அசோக மரம் யுகபத்திரிகை என்னும் பெயரைச் சினையாகு பெய

ராகப் பெற்றது எனலாம். வடிவம்.

வக்கிர புட்பம் - இது முருக்க மரம். முருக்குதல் எனினும் வக்கிரம் எனினும், முருக்கித் திரும்பிக் கொண் டிருப்பது என்பது பொருள். அத்தகைய வக்கிர-முருக்குப் பூவை உடைமையால், சினையாகு பெயராக முருக்கமரம்

வக்கிர புட்பம் எனப்பட்டது. உடற்கூறு.

வச்சிர சரீரம் = கோரைக்கிழங்கு வச்சிரம் போன்ற உடற்கூறு உடையதால் இப்பெயர்த்து. வடிவம்.

வண்டுகொல்லி = சம்பங்கி, சண்பகம், வேங்கை ஆகிய மலர்கள் வண்டுகட்கு ஆகா. அதனால், வண்டுகள் இம் மலர்களை நாடுவதில்லை. நாடின் கேடு உண்டாகும். "சண்பகமும் வேங்கையும் வண்டுணா மலர் மரம்’ என்பது