பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 மர இனப் பெயர்கள்

திவாகர நூற்பா. எனவே, இவை வண்டுகொல்லி எனப்

பட்டன. பண்பு - செயல்.

வனசந்திரிகை-வனம்=காடு; சந்திரிகை=வெண்ணிலா, மல்லிகை, காட்டில் வெண்மையாக = வெண்ணிலவொளி போல் இருப்பதால் இப்பெயர்த்து. உடற்கூறு.

வருடபுட்பம் = இது தாழை, ஒராண்டு காலம் நீடிப்ப தால் இது வருட புட்பம் எனப்பட்டது. காலம்.

வர்ணப் பிரசாதம்= அகில் இது. 'முருகா என்னும் தலைப்பில், அகில்புகை முருகனுக்குப் பிரசாதம் படைத்தல் போல் ஊட்டப்படுவது பற்றிய செய்தியைக் காணலாம். கருவர்ணப் புகையாகிய பிரசாதமாகக் கடவுளுக்குச் செலுத்தப்படுகிறது என்னும் கருத்தில் அகில் இப்பெயர் தரப்பட்டிருக்கலாமோ? சார்பு.

வள்ளல் = இது வள்ளைக் கீரை. வள்ளல் = வள்ளை என்னும் சொல் ஒற்றுமை பற்றிச் சொல் விளையாட்டாக இக்கீரைக் கொடி வள்ளல் எனப்பட்டது.

வாழைப் பழத்தி இரு எருமைநாக்கிக் கிழங்கு. எருமை நாக்கி என்பது ஒரு கோரை வகை. இதன் கிழங்கு எருமைநாக்குபோல் இருக்குமாதலின், இது எருமைநாக்கி எனப்பட்டது. மேலும், உவமைமேல் உவமையாய், இக் கிழங்கு வாழைப்பழம் போலவும் தோற்றமளிப்பதால்

'வாழைப் பழத்தி எனப்பட்டது. ஒப்புமை. வடிவு.

விசுவெளடதம் = கக்கு இது. விசுவம் = எல்லாம்; ஒளடதம் = மருந்து; எல்லா நோய்களையும் போக்கும் மருந்து விசுவ ஒளடதமாகும். சுக்கைப் பற்றி முன்னரும் கூறப்பட்டுள்ளது. சுக்குக்கு மிஞ்சிய மருத்துவமில்லை’ என்ற பழமொழி ஆங்குத் தரப்பட்டுள்ளது. பயன்.