பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 133

விசோகம் = அசோகம் இது. சோகம் = துயரம்: அசோகம் = துயரம் தராதது; நலம் பயப்பது. அசோகம் என்பதில், 'அ' என்பது இன்மைப் பொருள் உணர்த்துவது போலவே, விசோகம் என்பதில் வி” என்பது இன்மைப் பொருள் உணர்த்துகின்றது. விமலன் = மலம் இல்லாத கடவுள் என்பது போல. இந்த வி என்பதை, வடமொழி யில், ஒர் உபசர்க்கம் என்பர். எனவே, விசோகம் என்றால், சோகம் இல்லாதது எனப் பொருள்தரும். சொல் விளையாட்டாக அசோகம் விசோகம் எனப்பட்டது.

விட மரக்கனி = எட்டிக் கனி யிது. எட்டி நச்சுத் தன்மை வாய்ந்தது - கசப்பது. இக்கனியை யாரும் உண்ணார் ; எனவே, விடமரக்கணி எனப்பட்டது. பண்பு.

விட்டுணுப் பிரியம்=துளசி யிது. விட்டுணு=திருமால். இது திருமாலுக்குப் பிரியமானதாதலின், விட்டுணுப் பிரிய மாயிற்று. சார்பு.

விரல்நொடி நாயுருவி இது. கையில் உள்ள கட்டை விரல், நடுவிரல் ஆகிய இரண்டையும் இணைத்துத் தேய்த்தாற்போல் நொடித்து ஒலி எழுப்புவதற்கு 'விரல் நொடி என்பது பெயராகும். ஆடு மாடு முதலியவற்றை அழைக்கவும் அவற்றோடு விளையாடவும் யாரும் விரலை நொடிப்பதில்லை. வளர்ப்புநாயை அழைக்கவும் அதனோடு விளையாடவும், அந்நாயை வளர்ப்பவர் கைவிரல்களை நொடிப்பதுண்டு. நாய்க்கு மணி என்று பெயர் வைத் திருந்தால், 'மணி, இங்கே வா-வா என்று கைவிரல்களை நொடித்து அழைப்பது வழக்கம். எனவே, சார்பு காரண மாகவும் சொல் விளையாட்டாகவும் நாயுருவி, விரல்நொடி எனப்பட்டது. விரல்நொடியால் அழைக்கப்படும் பொரு ளைக் குறிக்கும் நாய் என்பது, நாயுருவி என்னும் பெயரிலும் உள்ளதல்லவா? சொல் விளையாட்டு.