பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 135

வைரவன் போல் வலிமை-வல்லமை அளிப்பது சிறுகீரை. சில்லி என்னும் பெயரும் இதற்கு உண்டு. சில்லி என்பது சிறு என்பதை ஈண்டு குறிக்கிறது. சொல் விளையாட்டாகச் சிறுகீரை சில்லி எனப்பட்டது. இக்கீரை வல்லமை தரும் என்பதற்கு ஒர் ஒலைச் சுவடிப் பாடல் பகுதி வருமாறு. " சில்லியைச் சமைத்துணத் தேகநோ யிலதாய் வல்லமை பேசிட வாய்க்கும் உத்தமமே - சில்லி=சிறுகீரை. எனவே, சிறுகீரை வைரவன்' எனப்

பட்டது. ஒப்புமை.