பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 மர இனப் பெயர்கள்

சா.சி.பி. அகரமுதலி:

அசோகவனம் = வாழைத் தோட்டத்திற்கு இப்பெயர் தரப்பட்டுள்ளது. அசோகம் = சோகம் இல்லாதது. வாழை = வாழ வைக்கும் மங்கலப் பொருள். சோகம் (துன்பம்) இன்றி வாழ வைப்பது எனச் சொல் விளை யாட்டாக வைக்கப்பட்டிருக்கலாம். இலங்கையில் சீதை யிருந்த அசோகவனம் போல் தோற்றத்தில் ஒத்திருப்ப தாலும் வாழைத் தோட்டம் இப்பெயர் பெற்றிருக்கலாம்.

ஆண்மஞ்சள் = மஞ்சள் கறிமஞ்சள், பூசுமஞ்சள் என இரு வகைப்படும். பூசு மஞ்சள் என்பது, பெண்கள் முகத்தில் பூசிக்கொள்ளும் மஞ்சளாகும். எனவே, கறியுடன் (காய் கறியுடன்) சேர்த்துச் சமைக்கப்படும் கறிமஞ்சள் ஆண் மஞ்சள் எனப்பட்டது. சார்பு.

ஆண் மூங்கில் = மிகவும் துளையுள்ள மென்மையான மூங்கில் பெண் மூங்கில். மிகவும் கெட்டியான - வலுவான மூங்கில் ஆண் மூங்கில் ஆகும். உடல் கூறு.

ஆனந்த கற்பம் = கஞ்சா இது. சித்தர்களும் இதனைப் பயன்படுத்திச் சிறிது நேரமாயினும் போதை மகிழ்ச்சியில்

இருப்பதால், கஞ்சா ஆனந்த கற்பம் எனப்பட்டது. பயன்.

இரும்பு நீற்றி = எருக்கம் இலை இரும்பையும் நீறாகச் (பசுபமாகச்) செய்ய உதவுமாம்; அதனால் இப்பெயர் பெற்றது. பண்பு.

இலட்சுமி விலாசம் = இது பாக்கு. மங்கலமான இடத்திலும் செயலிலும் இலட்சுமி இருப்பதாகச் சொல்வது மரபு. திருமணத்திற்கு முன் பெண் வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் செய்து கொள்ளும் உறுதிப்பாட்டிற்குப் பாக்கு மாற்றுதல்' என்று சொல்வது மரபு. வெற்றிலை பாக்கை