பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 139

ஒருவர்க்கொருவர் மாற்றிக்கொடுத்து வாங்கிக் கொள்வர். திருமண அழைப்பாக உற்றார் உறவினர்க்குத் தாம்பூலம் வைத்தலுக்கும் பாக்கு வைத்தல்' என்று பெயர் சொல்வது வழக்கம். மங்கல நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில், வாயிற் படியில், வாழை, கரும்பு முதலியவற்றுடன் பாக்குக் (கமுகுக்) குலையும் கட்டி வைப்பதும் வழக்கம் இதனை, மணிமேகலை விழாவறை காதையில் உள்ள

' காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்

பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின்'- (46,47)

என்னும் பாடல் பகுதியால் அறியலாம். இதனால், பாக்கு, இலட்சுமி விலாசம் உடையதாகச் சொல்லப்பட்டிருக்க லாம். இது சார்பு.

மற்றொரு காரணமும் கூறலாம். அட்டலக்குமிகள் எனப்படும் எட்டு இலக்குமிகளுள், செல்வம் தரும் பாக்கிய லட்சுமியும் (தனலட்சுமியும்) ஒர் இலட்சுமியாகும். மற்றும், இலட்சுமி என்னும் பொருளில், பாக்கியம், பாக்கியவதி, தனபாக்கியம், சவுபாக்கியம் முதலிய பெயர்கள் பெண் கட்கு இடப்படுவது ஈண்டு எண்ணத் தக்கது. எனவே, பாக்கு என்பது, தன் சொல்லோடு தொடர்புடைய பாக்கியம் என்னும் இலட்சுமி விலாசத்தைப் பெற்றிருப்ப தால் இலட்சுமி விலாசம் எனப்பட்டது என்றும் கூறலாமோ! இது சொல் விளையாட்டு. போகர் ஆயிரத் திருநூறு (முதற் காண்டம்) என்னும் போகர் நிகண்டில் பாக்குக்கு இப்பெயர் தரப்பட்டுள்ளது. பாடல் பகுதி.

" நோக்கினிட லட்சுமியின் விலாச மாகும்

நிகரில்லாப் பாக்கினிட நாம மாமே' (766)

என்பதாகும்.