பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 14|

கந்த நிலையம் = இது மல்லிகை வகை. இது நறுமணத்தின் நிலையமாக (இருப்பிடமாக) இருப்பதால் இப்பெயர்த் தாயிற்று. கந்தம் = நறுமணம். பண்பு.

கந்த பந்து = மாங்கனி இது. மாங்கனி ஏறத்தாழப் பந்து வடிவாகவும் நல்ல மணம் (கந்தம்) உடையதாகவும் இருப்பதால் இப்பெயர்த்து. பண்பு-வடிவம்.

கந்த மோகினி சண்பக மொக்கு இது. நறுமணத் தைக் கொண்டு, காண்பதற்கு மோகினிபோல் அழகா யிருப்பதால் இது கந்த மோகினி எனப்பட்டது. பண்பு, வடிவம்.

கந்த வசீகரம் = இது செங்சாந்தள். மணத்துடன் கவர்ச்சியாகவும் (வசீகரமாகவும்) இருப்பது பண்பு-வடிவு,

கப்படி கப்பு அடி. கப்பு = கிளை , அடி = வேர் (அடிப்பகுதி); மரத்தின் வேர்ப் பாகத்திலிருந்தே தோன்றும் கப்புகள் (கிளைகள்) கப்படி யாகும். வடிவம்.

கமண்டலம் = சுரைக் குடுக்கை கமண்டலம் போல் இருப்பதாலும், கமண்டலமாகப் பயன்படுத்த உதவுவ தாலும் கமண்டலம் எனப்பட்டது. வடிவு-பயன்.

கம்பளிப்பூச்சி மரம் = முசுக்கட்டை மரம் இது, கம்பளிப்பூச்சி என்பது புழு வகை. பட்டுப் புழு, முசுக் கட்டை இலையைத் தின்று வளர்வதால் இம்மரத்தில் மிகுதியாயிருக்கும்; இதனால் இம்மரம் கம்பளிப்பூச்சி மரம் எனப்பட்டிருக்கலாம். செயற்கை முறையில் இக்காலத்தில் பட்டுப் புழு இவ்வாறு வளர்க்கப்படுவது அறிந்த செய்தியே. சார்பு.

கயந்தலை - யானை அறுகு என்னும் அறுகம் புல் வகை இது. கயம் = யானை. யானைத் தலைபோல் பெரிய