பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 மர இனப் பெயர்கள்

அளவில் கொடுத்தல் வேண்டும்' - எனப் பொருட்பண்பு நூல் கூறுகிறது. நோய்களைப் போக்கி அன்னை போல் உடலைப் பாதுகாப்பதால் இது அன்னை எனப்பட்டது. ஒப்புமை.

தே. வெண்பா:

' உதவிசில செய்து உடலை ஒம்பும் இது நீபார்

இதழி யெனும் கொன்றைபுவி யில் -

ஆட்கொல்லி விதை: தில்லைமர விதை இது. தில்லை விதை கொடிய நஞ்சு, உயிர்க்குக் கேடு சூழும்; ஆதலின் இப்பெயர் பெற்றது என்பது சிலர் கொள்கை. சிலர் இதற்கு எதிர்மாறாகக் கூறுவர். தில்லை விதையைத் தீண்டாமல் இருப்பதே நல்லது. பண்பு - பயன்.

ஆயிரங் கச்சி: அடுக்கு இளநீர் இது. மிகுந்த காய் காய்க்கும் தென்னையை ஆயிரங் காய்ச்சி என்பர். இதில் இளநீர் அடுக்கடுக்காக இருப்பதால் இப்பெயர்த்து வடிவம்.

இருளகற்றி வெள்ளெருக்கு. வெள்ளெ ரு க் கின் வெள்ளைப் பூக்கள் இரவிலும் தெரிவதால் இருளகற்றி எனப்பட்டது. நிறம்'

இளிந்த காய்: இது பாக்கு. இளிதல் என்பதற்கு உரித்தல் என்னும் பொருள் சூடாமணி நிகண்டில் கூறப் பட்டுள்ளது. கொட்டையை உரித்தே பாக்கு உண்டாக்க வேண்டுமாதலில் இளிந்த காய் எனப்பட்டது. உடற்கூறு.

கடிச்சவாய் துடைச்சான்: இது காஞ்சொறி (செடி). நச்சு தீண்டப்பட்ட இடத்தை இதனால் தேய்த்துத் துடைத்தால் நலம் உண்டாகுமாதலின் இப்பெயர்த்து. பயன்.