பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 13

'பழமலத்தைப் போக்கும்; பகரில் உடலுக்கு

அழகுதரும்; புத்தி யளிக்கும்'என்பது அ.கு.பா. பாடல் பகுதி. மேற்கூறப்பட்ட பெயர்கள் பயனால் வந்தவை.

5. தமிழ்நாட்டில் விளைவதன்றி, வேறு நாடுகளி லிருந்தும் சிலவகைக் கடுக்காய் தருவிக்கப்படுதலால், இதற் குப் பிறதேசி (வேற்று நாட்டான்) என்னும் பெயரும் (சா.சி.பி.) உண்டு. சூரத்துக் கடுக்காய், காசிக் கடுக்காய், அவந்திக் கடுக்காய், காபூலிக் கடுக்காய், அரபிக் கடுக்காய், கப்பல் கடுக்காய் என்ற வகைகள் அவ்வப் பகுதிகளிலிருந்து வந்தனவாம். எனவே, பிற தேசி என்னும் பெயர் இதற்குப் பொருந்தும். இஃது இடத்தால் பெற்ற பெயராகும்.

சிவ சத்தி:

செந்நிறம் காரணமாகவும் வெப்பம் காரணமாகவும் சில மர இனங்கட்குச் சிவன் பெயர்கள் ஒப்புமையால் சூட்டப்பட்டுள்ளன. சிவசத்தி என்பது சிவனைக் குறிக் காமல், சிவனுடைய சத்தி (மனைவி) யாகிய உமையையே குறிக்கும். உமையம்மை உலகுக்கெல்லாம் தாயல்லவா? கடுக்காய் குழவித்தாய்' என்னும் பெயர் பெற்றிருப்ப தன்றி, "கடுக்காய் தாய்க்கு அதிகம் காண்’ என அகத்தியச் சித்தரால் பாடப்பட்டும் இருத்தலின், உலகத் தாயாகிய சிவசத்தியின் பெயர் (சா.சி.பி.) கடுக்காய்க்குச் சூட்டப்பட் டுள்ளது ஒப்புமை.