பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 மர இனப் பெயர்கள்

பாளை வெடித்த பிறகே காய் உருவாகித் தெரியும். இவ்வாறு மறைந்திருப்பதால் தனவஞ்சன் என்று பெயர் பெற்றிருக்கலாம். வடிவம்.

பாக்கியம் என்பது தனம். பாக்கியம் என்னும் சொல்லை வஞ்சிப்பதுபோல் குறைத்துப் பாக்கு என்று கூறப்படுவதால் இப்பெயர்த்து என்றும் கூறலாம். இது சொல் விளையாட்டு.

இதற்கு இன்னொரு பெயர்க் காரணமும் கூறலாமா! செல்வர் மட்டு மல்லர்-படு ஏழைகளுங்கூட வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்வர். சிலருக்கு உணவினும் வெற்றிலை பாக்கே இன்றியமையாததாகத் தெரியும். இவ்வாறு, பாக்கு, ஏழைகளின் தனத்தையும் (செல்வத்தை யும்) வஞ்சிப்பதால், அதாவது, செலவழிக்கச் செய்வதால் இப்பெயர் பெற்றது என்று வேடிக்கையாகச் சொல்லலாம். சார்பு. -

தனவான்: இது கொடி அரசு. கொடி அரசு அரசமர வகையில் ஒன்று. தனவான் என்றால் - பெருஞ் செல்வன். கொடி அரசு என்பது, கொடி கட்டி வாழும் அரசன் என்பது போலச் சொல் விளையாட்டாகப் பொருள் படலாம். தன வான் கொடியரசன் போன்றவன் அல்லவா? எனவே, கொடியரசு தனவான் எனப்பட்டிருக்கலாம், சொல் விளையாட்டு.

தாமிர பல்லவம்: அசோகமரம் இது. தாமிரம் = ஒர் உலோகம் (செம்பு); பல்லவம் = தளிர். அசோகந்தளிர் நிறத்தால் தாமிரம் போன்றிருக்குமாதலின் இப்பெயர்த்து. வடிவம்.

திரிபுசம்: இது கத்தரிச் செடி. நெடுநேரம் எண்ணியும் நேரில் பார்த்தும் ஒரு காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.