பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 மர இனப் பெயர்கள்

போக்கும். இதுபற்றிப் பொருட்பண்பு நூலிலுள்ள கருத்து அதிலுள்ளவாறு அப்படியே வருமாறு:

'பாக்கை முறைப்படி குடிநீரிட்டு வாய் கொப்பளித்து வர, பல் ஈறில் உண்டாகும் நோய்கள் தீரும்.”

'பாக்குமர வேரைக் குடிநீரிட்டு வாய் கொப்பளித்து வர, உதட்டுப் புண்களும் சற்றுப் புண்களும் தீரும்.”

இச்செய்தி சித்தர் பாடல்களிலுள்ள செய்தியாகும். போகர்நிகண்டில் இப் பெயர் கூறப்பட்டுள்ளது.

பாக்கினிட பேர்தனையே பகரக் கேளு ..

பல்லுக்கு வெளியு மாகும் ” (766)

என்பது நிகண்டுப் பாடல் பகுதி. எனவே, பல்லுக்கு வெளியேயுள்ள உறுப்புகட்கு நலம் பயப்பதால், பாக்கு, பல்லுக்கு வெளி எனும் பெயர் பெற்றிருக்கலாம். பயன்.

பால புட்பம் = முல்லைப் பூ இது. பாலபுட்பம் என்னும் வடமொழிப் பெயரை, இளம் யூ-சிறு பூ என மொழி பெயர்க்கலாம். இளஞ்சிறார்கள் பாலர்கள் எனப்படுகின் றனரன்றோ? தாமரைப்பூ, பூசணிப்பூ முதலிய பல பூக் களினும் முல்லைப்பூ மிகவும் சிறியது; அவற்றினும் விரைவில் வாடக் கூடியது; இதனால் இதற்குப் பாலபுட்பம் எனும் பெயர் இடப்பட்டிருக்கலாம். பண்பு.

புகழ் புகழ்=மூக்கிரட்டைக் கொடி இது. ஒரு சொல் விளையாட்டுப் பெயராகும் இது. மூக்கில் இரட்டைத் துளையிருப்பது என்னும் பொருள் தரும் மூக்கிரட்டை என்பது இந்த மூலிகைக்குத் தற்செயலாய் ஏற்பட்ட பெயரே. இது முக்குறட்டை, மூக்கரட்டை எனப்படுதலும் உண்டு. அ. கு. பா. பாடல்: